ஜாங் நன்ஷான்
ஜாங் நன்ஷான் (Zhong Nanshan) (பிறப்பு: 1936 அக்டோபர் 20) [1] இவர் ஓர் சீன தொற்றுநோயியல் நிபுணரும் மற்றும் நுரையீரல் நிபுரும் ஆவார். இவர் 2003இல் சார்சு கொரோனா வைரசைக் கண்டுபிடித்தார். [2] 2005 முதல் 2009 வரை சீன மருத்துவ சங்கத்தின் தலைவராக இருந்த இவர் தற்போது தொராசிக் நோய் இதழின் தலைமை ஆசிரியராக இருக்கிறார். சார்சு வைரசு தொற்றை நிர்வகிப்பதற்காக ஜாங் சர்வதேச புகழ் பெற்றார். [3] இவரது எச்சரிக்கையை அரசு மறுத்தது. அது நெருக்கடியின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டது. [4] இவர் 2010இல் சீனாவின் முதல் 10 விஞ்ஞானிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [5] வுஹானில் தோன்றிய 2019–20 கொரோனா வைரசு தொற்றின் போது, இவர் நெருக்கடியை நிர்வகிப்பதில் ஆலோசகராக இருந்தார். கல்விஜாங் பெய்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். அங்கு இவர் உள் மருத்துவத்தில் பயிற்சியை முடித்தார். 1980களில், லண்டனில் உள்ள புனித பார்தலோமிவ் மருத்துவமனை மற்றும் எடின்பரோ பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் 1979 மற்றும் 1981க்கும் இடையில் மேலதிக பயிற்சியை முடித்தார். எடின்பரோ மருத்துவப் பள்ளியில் 1981இல் எம். டி. பட்டம் பெற்றார் [2] தொழில்ஜாங் 2000ஆம் ஆண்டில் சீன தொராசிக் சமூகத்தின் தலைவரானார். 2005இல் சீன மருத்துவ சங்கத்தின் தலைவரானார். இவர் தற்போது குவாங்சோ சுவாச நோய் நிறுவனத்தின் இயக்குநராகவும், தொராசிக் நோய் இதழின் தலைமை ஆசிரியராகவும் உள்ளார். [2] புரத ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி நோய்க்கு இடையிலான உறவை ஜாங் கண்டுபிடித்தார். மேலும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆற்றல் நுகர்வு குறித்த அளவீடு செய்யப்பட்ட சூத்திரத்தை உருவாக்கியுள்ளார். [6] சார்சு தொற்றின் போதுஜாங் நன்ஷான் குவாங்சோ சுவாச நோய்களின் நிறுவனத்தை இயக்கியபோது, அவர்கள் 2002 திசம்பர் 20 அன்று இரண்டாவது சார்சு நோயாளியை கண்டறிந்தனர். அடுத்த மாதத்தில் இதேபோன்ற மேலும் 28 நோயாளிகள் ஜாங்ஷானில் மட்டுமே பதிவாகின. இதன் விளைவாக, 2003 சனவரி 21 அன்று, ஜாங் மற்றும் பிற மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த சிறப்பு நோயைப் பற்றி ஒரு அவசர கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும் இதற்கு வித்தியாசமான நுரையீரல் அழற்சி நோய் (நிமோனியா) என்ற பெயரைக் கொடுத்தனர். [7] இது சார்சுக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது. 2003 சனவரி 28 அன்று, ஜாங் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இவருக்கு எக்சு-கதிர் எடுத்த உடனே இவருக்கு நுரையீரல் அழற்சி தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னணி ஆராய்ச்சியாளர் மற்றும் மருத்துவரான தனக்கு சார்சு தொற்று ஏற்பட்டு சுவாச நோய்வாய்ப்பட்ட செய்தி பொது மக்களுக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், ஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தார். பின்னர் இந்த சுவாச நோய் சார்சால் ஏற்படவில்லை என்று நம்பி வீடு திரும்பினார். இவரது மனைவி லி ஷாஃபெனின் கவனிப்புடன் இவர் எட்டு நாட்களுக்குப் பிறகு குணமடைய முடிந்தது. குணமடைந்த பின்னர் இவர் உடனடியாக குவாங்சோ சுவாச நோய்களின் நிறுவனத்திற்கு திரும்பினார். சார்சுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தினார். 2003 பிப்ரவரி 11 குவாங்டாங் சுகாதாரத் துறை நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஜாங் இந்த நோயையும் அதன் அறிகுறிகளையும் விளக்கினார். மேலும் இது தடுக்கக்கூடியது மற்றும் குணப்படுத்தக்கூடியது என்று கூறி பொதுமக்களை அமைதிப்படுத்தினார். [8] சார்சு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது ஜாங் முதன்முறையாக ஆக்கிரமிப்பு அல்லாத காற்றோட்ட முறைகளைப் பயன்படுத்தினார். இது நோயாளிகள் உட்கொள்ளக்கூடிய பிராணவாயுவின் அளவை அதிகரித்தது; இந்த முறை நோயாளிகளின் வலியைக் குறைத்தது. கடுமையான நிலைமைகளை அனுபவிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கார்டிசோன் என்ற மருந்தின் பயன்பாட்டை முன்மொழிய வேண்டும் என்றும் ஜாங் வலியுறுத்தினார். இது கடுமையான நோயாளிகளின் இறப்பு விகிதத்தை கணிசமாக 13% ஆகக் குறைத்தது, மேலும் மொத்த சிகிச்சை நேரத்தையும் குறைத்தது. கார்டிசோனைப் பயன்படுத்துவதற்கான முடிவு அந்த நேரத்தில் அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரியதாக இருந்தது. 2003 பிப்ரவரியில், சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஏற்கனவே சாதாரண கிளமிடியா என்பது வித்தியாசமான நுரையீரல் அழற்சியின் நேரடி காரணம் என்ற அதிகாரபூர்வமான பார்வையை வெளியிட்டிருந்தது. இதன் விளைவாக, சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட ஒரே வழி சார்சு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துவதாகும். குவாங்டாங்கில் நூற்றுக்கணக்கான நோயாளிகளின் அவதானிப்பின் அடிப்படையில், கார்டிசோனின் மிதமான பயன்பாட்டிற்கு வக்காலத்து வாங்க ஜாங் உறுதியாக இருந்தார். ஜாங் பின்னர் ஒரு நேர்காணலில் இது அவமானத்தையும் அவதூறையும் தரக்கூடும் என்று தனக்குத் தெரியும் என்று கூறினார். ஆனால் இவர் தனது அவதானிப்புகள் மற்றும் நோய் தொடர்பான விஞ்ஞான தீர்ப்புகளில் நம்பிக்கை வைத்ததால் இவர் தொடர்ந்து இருந்தார். [9] குவாங்டாங் அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் சார்சு நோய்க்கு சிகிச்சையளிப்பதில் குவாங்டாங்கில் நேர்மறையான முடிவுகளுடன், ஜாங்கின் முறை பின்னர் சீனாவில் உள்ள அனைத்து சார்சு நோயாளிகளுக்கும் சிகிச்சையளிப்பதற்கான நிலையான நெறிமுறையாக பயன்படுத்தப்பட்டது. [10] உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் எவான்சு தலைமையிலான பிரதிநிதிகள் ஏப்ரல் தொடக்கத்தில் சீனாவுக்குச் சென்றபோது, ஜாங் சார்சின் சிறப்பியல்புகளையும் சீனாவில் சிகிச்சை மற்றும் தடுப்பு முறையையும் முன்வைத்தார். ஜாங்கின் விளக்கம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் உலகெங்கிலும் சார்சுக்கு எதிரான போராட்டத்திற்கு இவரது முறைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. [11] தனிப்பட்ட வாழ்க்கை![]() ஜாங் 1936 அக்டோபரில் நாஞ்சிங்கில் உள்ள மத்திய மருத்துவமனையில் பிறந்தார். [6] இவரது குடும்பம் புஜியான் மாகாணத்திலுள்ள ஜியாமென் நகரைச் சேர்ந்தவர்கள். [12] ஜாங் 1950களில் கல்லூரி ஒரு சிறந்த விளையாட்டு வீரராக இருந்தார். பெய்ஜிங் நகர ட்ராக் அண்ட் ஃபீல்ட் குழு இவரை ஒரு முழுநேர விளையாட்டு வீரராக நியமிக்க முயன்றது. ஆனால் இவர் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை மறுத்துவிட்டார். இவரது விளையாட்டு இணைப்பு மூலம், 13 ஆண்டுகளாக சீன பெண்கள் தேசிய கூடைப்பந்து அணியில் உறுப்பினராக இருந்த ஒரு சிறந்த கூடைப்பந்து வீரரான லி ஷாஃபென் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் 1963 திசம்பர் 31 அன்று திருமணம் செய்து கொண்டனர். [13] இவர்களுக்கு ஜாங் வீட் என்ற ஒரு மகனும் மற்றும் ஜாங் வெய்யூ என்ற ஒரு மகளும் என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் ஜாங் வீட் ஒரு மருத்துவராகவும், மற்றும் ஜாங் வெய்யூ ஒரு நீச்சல் வீரராகவும் இருக்கிறார்கள். [14] மேலும் காண்க
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia