சியாங்சு
சியாங்சு அல்லது ஜியாங்சு (ⓘ), மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. பரப்பளவு அடிப்படையில் சீனாவின் இரண்டாவது சிறிய மாகாணமாக உள்ள போதிலும், மக்கட்டொகை அடிப்படையில் இது சீனாவின் இரண்டாவது மாகாணமாகக் காணப்படுகின்றது. மொத்த தேசிய உற்பத்தியில் இரண்டாவதாக உள்ளது[4]. இதன் வடக்கே சாண்டோங் மாகாணமும், மேற்கே அன்ஹுயி மாகாணமும், தெற்கே செஜியாங் மற்றும் சாங்காயும் எல்லைகளாக உள்ளன. வரலாறுஆரம்ப காலத்தில் இப்பிரதேசம் மத்திய சீனாவின் நாகரிகங்களிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. பின்னர் சூ அரசமரபினரின் காலத்தில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஆன் அரசமரபினர் காலத்தில் இது இரு மாகாணங்களாக ஆட்சிசெய்யப்பட்டது. புவியியல்இது பெரிதும் தாழ்வான சமவெளியான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. 68 சதவீதமான நிலப்பரப்பு சமவெளியாக உள்ளது. 18 சதவீதமான பரப்பு நீர்நிலைகள் ஆகும். சீனாவின் மிக நீண்ட ஆறான யாங்சி ஆறு இம்மாகாணத்தின் தெற்குப் பகுதியூடாகப் பாய்ந்து கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது. சீனப் பெரும் கால்வாய் இம்மாகாணத்தை வடக்கிலிருந்து தெற்காக ஊடறுத்துச் செல்கின்றது. அரசியல்சீனாவின் ஏனைய பகுதிகளைப்போலவே இங்கும் இரு கட்சி அரசமைப்பைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் அதி உயர் அரச அதிகாரியாக மாகாண ஆளுநர் விளங்குகின்றார். நிர்வாகப் பிரிவுகள்இம்மாகாணம் 13 மேல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை 98 கவுண்டி அலகுகளாகப் பிரிக்கப்பட்டு மேலும் 1488 நகர நிலை அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம்2014இல், சியாங்சு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8 ட்ரில்லியன் யுவான் ($759 பில்லியன் அமெரிக்க டொலர்) ஆகக் காணப்பட்டது. தனி நபர் வருமானம் 52,448 ரென்மின்பி ஆகக் காணப்பட்டது. இம்மாகாணம் சிறந்த நீர்ப்பாசன வசதியைக் கொண்டுள்ளது. பிரதான பயிர்களாக நெல், கோதுமை, மக்காச்சோளம், சோளம் மற்றும் சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் பணப்பயிர்களான பருத்தி, நிலக்கடலை, சோயா அவரை, எள், தேயிலை போன்றவையும் விளைவிக்கப்படுகின்றன. மக்கட் பரம்பல்இம்மாகாணத்தில் பெரும்பான்மையாக ஆன் சீனர்கள் வசிக்கின்றனர். மேலும் மஞ்சு இனக்குழு, ஊய் இனக்குழு போன்றவை சிறுபான்மையினராக உள்ளனர். போக்குவரத்துநாஞ்சிங் லுக்கோ பன்னாட்டு விமானநிலையம் மாகாணத்தின் பிரதான விமானநிலையம் ஆகும். பெய்ஜிங்-சாங்காய் நகரங்களுக்கிடையிலான சிங்கு தொடர்வண்டிச் சேவை இம்மாகாணம் ஊடாகச் செல்கின்றது. நன்கு மேம்பட்ட சாலை வலையமைப்பை சியாங்சு கொண்டுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia