ஜாம்காம்பாலியம்
ஜாம்காம்பாலியம் அல்லது காம்பாலியம் (JamKhambhalia) இந்தியா, குஜராத் மாநில சௌராஷ்டிரப் பகுதியில், தேவபூமி துவாரகை மாவட்டத்தின் நிர்வாகத் தலையிட நகரம் மற்றும் நகராட்சி மன்றமாகும். மக்கள் வகைப்பாடு2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 41,734 ஆகும்.[1] எழுத்தறிவு விகிதம் 69%. முக்கிய சமுகத்தவர்கள்; ஜடேஜா, அகிர், மெகர், பார்வாத், ராப்பரி மற்றும் சரண். இசுலாமியர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். நிலவியல்மிகப் பண்டைய காம்பாலிய நகரத்தின் சிதிலமடைந்த கில்லெ பந்தி எனும் தலைவாசலை இன்றும் காணலாம். இது துவாரகை செல்லும் வழியில் உள்ளது. காம்பாலியம் நகரத்திற்கு ஐந்து தலைவாசல் உள்ளது. அவைகள்: நகர் வாயில், பொர் வாயில், ஜோத்பூர் வாயில், சலையா வாயில் மற்றும் துவாரகை வாயில். துவாரகை வாயிலின் படம் இங்கு காணலாம்.
![]()
பார்க்க வேண்டிய இடங்கள்
தொழில்கள்காம்பாலியம் நகரத்தில் உற்பத்தியாகும் வெண்ணெய், நெய், இந்தியா முழுவதும் விற்பனையாகிறது. இங்கு 35 நிலக்கடலை எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது. ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்களின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. மரச்சிறபங்களுக்கான இயந்திரங்கள் இங்கு அதிகம் தயாரிக்கப்படுகிறது. தொடருந்து போக்குவரத்து வசதிகள்காம்பாலியம் நகர இரயில் நிலையம் இந்தியாவின் பெருநகரங்களை இணைக்கிறது.[2] மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia