ஜிவி (Jiivi) (நுண்ணறிவு ) என்பது 2019ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான பரபரப்பூட்டும் திரைப்படமாகும். பாபு தமிழ் என்பவர் எழுதிய இப்படத்தை வி. ஜே. கோபிநாத் இயக்கியிருந்தார். எம். வெள்ளப்பாண்டியன், சுடலைக்கண் வெள்ளப்பாண்டியன், சுப்பிரமணியன் வெள்ளப்பாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் நடிகர் வெற்றி ஒரு முன்னணி பாத்திரத்தில் நடிக்க கருணாகரன், ரோகினி, மைம் கோபி , மோனிகா சின்னகோட்லா, அசுவினி சந்திரசேகர் உட்பட பலரும் நடித்திருந்தனர். ஒலிப்பதிவையும், இசையையும் கே.எஸ்.சுந்தரமூர்த்தி மேற்கொண்டார். கலை, தயாரிப்பு கட்டுப்பாடு, நிர்வாகத் தயாரிப்பு, தயாரிப்பு மேற்பார்வை முறையே வைரபாலன், எஸ். நாகராஜன், விவின் எஸ்ஆர், ஐபி கார்த்திகேயன் ஆகியோரால் கையாளப்பட்டது.[1] இப்படம் 28 சூன் 2019 அன்று வெளியாகி வெற்றி பெற்றது.[2][3]
கே.எஸ்.சுந்தரமூர்த்தி இப்படத்தின் பாடல்களுக்கும், பின்னணிக்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இசை உரிமையை யுவன் சங்கர் ராஜா தனது யு1 ரெக்கார்ட்ஸ் பதாகையில் வாங்கினார்.[4]தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' இசைத் தொகுப்பிற்கு ஒரு நேர்மறையான மதிப்பாய்வை அளித்து: "சுந்தரமூர்த்தி இப்பணியை நன்றாக முடித்திள்ளார்!" என எழுதியது.[5][6][7][8]