வெற்றி (நடிகர்)
வெற்றி சுடலை (Vetri Sudley) தொழில்ரீதியாக வெற்றி என்று அழைக்கப்படும் இவர், தமிழ்த் திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். 8 தோட்டாக்கள் (2017), ஜீவி (2019)[1][2] போன்ற தனது சொந்த குடும்பத் தயாரிப்பு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[3][4] தொழில்வெற்றி, தயாரிப்பாளர் எம். வெள்ளைபாண்டியனின் மகனாவார்.[3] இவர் தனது தந்தை தயாரித்து 2017இல் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட "8 தோட்டாக்கள்" திரைப்படத்தில் காவல் துணை ஆய்வாளர் வேடத்தில் அறிமுகமானார். பின்னர் இவர் ஜிவி (2019) என்ற பரபரப்பூட்டும் திரைப்படத்தில் தோன்றினார். இது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று பெரிய வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டில் இவர் C/O காதல் என்ற தொகுப்புப் படத்தில் தோன்றினார், இது C/o கஞ்சரபாலம் என்ற தெலுங்கு படத்தின்[5] மறு ஆக்கமாகும். இவரது அடுத்த படமான வனம்[6] 26 நவம்பர் 2021 அன்று வெளியானது குத்துச்சண்டை வீரராக மாற விரும்பும் வடசென்னை பையனாக ரெட் சாண்டல் படத்திலும்,[7][8] ஒரு கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, தனது நினைவுகளை இழந்து தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு வேடத்தில் மெமரிஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.[9] திரைப்படவியல்
சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia