ஜூலியசு ஓனா
ஜூலியசு ஓனா (ஆங்கிலம்: Julius Onah) (பிறப்பு: 10 பெப்ரவரி 1983) என்பவர் நைஜீரியா நாட்டுத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார்.[1] இவர் தி கிளோவர் பீல்ட் பாரடாக்ஸ் (2018), லூஸ் (2019), மற்றும் வரவிருக்கும் கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு (2025) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஆரம்ப கால வாழ்க்கைஇவர் பெப்ரவரி 10, 1983 அன்று நைஜீரியாவில் உள்ள பெனு மாநிலத்தின் மகுர்டியில் பிறந்தார். இவரது தந்தை அடோகா ஓனா, நைஜீரிய தூதர் ஆவார். இவர் தனது இளமைகாலங்களை பிலிப்பைன்ஸ், நைஜீரியா, டோகோ மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளில் வளர்ந்தார். பின்னர் ஆர்லிங்டன் கவுண்டி, வர்ஜீனியாவுக்கு சென்றார். இவருக்கு அந்தோனி ஓனா என்ற ஒரு இரட்டை சகோதரர் உண்டு, இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான தி பிரைஸ் படத்தை இயக்கியுள்ளார்.[2] தொழில்இவரின் படைப்புகள் சன்டான்சு, பெர்லின், டிரிபெகா, லண்டன், துபாய், லாஸ் ஏஞ்சல்ஸ், மெல்போர்ன் மற்றும் கேமரிமேஜ் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன. மேலும் 2010 கோடையில், பிலிம்மேக்கர் பத்திரிக்கையின் சுதந்திரத் திரைப்படத்தின் புதிய முகங்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான தி கேர்ள் இஸ் இன் ட்ரபிள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தி கிளோவர் பீல்ட் பாரடாக்ஸ் மற்றும் 2019 ஆம் ஆண்டு லூஸ் என்ற படத்தையும் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். அதை தொடர்ந்து கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு என்ற மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காவது கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தை இயக்க உள்ளார், இதில் அந்தோணி மேக்கி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.[3] திரைப்படம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia