ஜெகன்மூர்த்தி
மு. ஜெகன்மூர்த்தி (M. Jaganmoorthy) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1966 மே 10 அன்று பிறந்தார்.[1] சமூக ஆர்வலரான இவர் பூவை மு. ஜெகன் மூர்த்தி என்ற பெயராலும் அறியப்பட்டார்.[2] தமிழ்நாட்டிலுள்ள கே.வி.குப்பம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். புரட்சி பாரதம் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.. புரட்சிபாரதம் கட்சியின் நிறுவனர் டாக்டர் பூவை எம்.மூர்த்தி 2002 செப்டம்பர் 2 அன்று மாரடைப்பால் இறந்த பிறகு, பூவை மு. ஜெகன் மூர்த்தி 2002 செப்டம்பர் 7 அன்று கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆதரவுடன் அக்கட்சியின் தலைவரானார்.[3] 2006 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து, அரக்கோணம் தொகுதிக்கான தமிழகச் சட்டமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் அவரது கட்சியும் 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தன. 2021 தமிழ்நாடு தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியைத் தொடர்ந்தார். தமிழ்நாட்டின் கே. வி. குப்பம் தொகுதியில் போட்டியிட்டு 2021 தேர்தலில் வெற்றி பெற்றார். வகித்த பதவிகள்சட்டமன்ற உறுப்பினராக
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia