ஜெனிபர் ஜோனா அனிஸ்டன் (Jennifer Joanna Aniston பிறப்பு பிப்ரவரி 11, 1969) ஓர் அமெரிக்க நடிகை ஆவார். 1994 முதல் 2004 வரையிலான தொலைக்காட்சித் தொடர்களான சிட்காம்ஃப்ரெண்ட்ஸில் ரேச்சல் கிரீனாக நடித்ததற்காகப் பரவலாகப் புகழ் பெற்றார், இதற்காக பிரைம் டைம் எம்மி, கோல்டன் குளோப் மற்றும் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகளைப் பெற்றார். 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் அனிஸ்டன் தொடர்ந்து இடம்பிடித்துள்ளார். [1][2]
நடிகர்கள் ஜான் அனிஸ்டன் - நான்சி டவ் ஆகியோரின் மகளான இவர், 1988 ஆம் ஆண்டு வெளியான மேக் அண்ட் மீ திரைப்படத்தில் அறிமுகமானார். 1993 ஆம் ஆண்டு வெளியான திகில் நகைச்சுவைத் திரைப்படமானலெப்ரெச்சவுனில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஆஃபீஸ் ஸ்பேஸ் (1999), புரூஸ் அல்மைட்டி (2003), தி பிரேக்-அப் (2006), மார்லி & மீ (2008), ஜஸ்ட் கோ வித் இட் (2011), ஹாரிபிள் பாஸ்ஸ் (2011), வீ ஆர் தி மில்லர்ஸ் (2013), டம்ப்ளின் (2018), மற்றும் மர்டர் மிஸ்டரி (2019) போன்ற வணிக ரீதியில் வெற்றி பெற்ற நகைச்சுவைத் திரைப்படங்களில் நடித்துள்ளார். அனிஸ்டன் விமர்சன ரீதியில் பாராட்டப்பட்ட சுயாதீனத் திரைப்படங்களான தி குட் கேர்ள் (2002), பிரண்ட்ஸ் வித் மணி (2006) மற்றும் கேக் (2014) ஆகியவற்றிலும் நடித்தார். 2019 இல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஆப்பிள் டிவி+ நாடகத் தொடரான தி மார்னிங் ஷோவைத் தயாரித்து நடித்தார், இதற்காக இவர் ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதைப் பெற்றார்.
ஆரம்பகால வாழ்க்கை
அனிஸ்டன் பிப்ரவரி 11, 1969- இல் லாஸ் ஏஞ்சல்சில் [3][4] நடிகர் ஜான் அனிஸ்டன் மற்றும் நடிகை நான்சி டவ் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். [3] இவருடைய தாய்வழி தாத்தாக்களில் ஒருவரான லூயிஸ் கிரிகோ இத்தாலியைச் சேர்ந்தவராவார். [5] ஜான் மெலிக், இவரது மூத்த தாய்வழி ஒன்றுவிட்ட சகோதரர்; மற்றும் அலெக்ஸ் அனிஸ்டன், இவரது இளைய தந்தைவழி ஒன்றுவிட்ட சகோதரராவார். [3] இவரது தந்தையின் சிறந்த நண்பர்களில் ஒருவரான நடிகர் டெல்லி சவாலாஸ் இவரது மாமனார் ஆவார். [3][6]
தொழில் வாழ்க்கை
1988–1993: ஆரம்ப காலங்களில்
அனிஸ்டன் முதலில் ஆஃப்-பிராட்வேவின் தயாரிப்புகளான ஃபார் டியர் லைஃப் மற்றும் டான்சிங் ஆன் செக்கர்ஸ் கிரேவ் போன்றவற்றில் பணியாற்றினார், [3] மேலும் தொலைபேசி மூல விற்பனையாளர, உணவு விடுதிப் பணியாளர், பைக்மெசஞ்சர் போன்ற பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டார். [3] 1988 ஆம் ஆண்டில், விமர்சன ரீதியாகத் தடைசெய்யப்பட்ட அறிவியல் புனைகதை சாகசத் திரைப்படமான மேக் அண்ட் மீயில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அடுத்த ஆண்டு, நியூட்ரிசிஸ்டமின் செய்தித் தொடர்பாளராக தி ஹோவர்ட் ஸ்டெர்ன் ஷோவில் நடித்தார்.[7] பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். [8]
1994–2004: அங்கீகாரம்
தான் நடித்த நான்கு தொலைக்காட்சித் தொடர்களும் தோல்வி அடைந்ததால் மனச்சோர்வடைந்த அனிஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் எரிவாயு நிலையத்தில் உள்ள தொலைக்காட்சி நிர்வாகி வாரன் லிட்டில்ஃபீல்ட்டை அணுகி நடிப்பதற்கான வாய்ப்பினைக் கேட்டார். சில மாதங்களுக்குப் பிறகு ஃபிரண்ட்ஸ், [9][10]:{{{3}}} தொடரில் நடிக்க உதவினார். மோனிகா கெல்லரின் பாத்திரத்திற்காக அனிஸ்டனை நடிப்புச் சோதனை செய்ய தயாரிப்பாளர் விரும்பினார், [11] ஆனால் கோர்ட்டனி காக்ஸ் அந்தக் கதாப்பத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவராக கருதப்பட்டார், அதனால் அனிஸ்டன் ரேச்சல் கிரீன் கதாப்பத்திரத்தில் நடித்தார். இவருக்கு சாட்டர்டே நைட் லைவ்வில் ஒரு சிறப்பு வீரராகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் பிரண்ட்ஸ் தொடருக்காக அதை நிராகரித்தார்.[12] 2004 இல் நிகழ்ச்சி முடியும் வரை இவர் ரேச்சலாக நடித்தார், அனிஸ்டன் தொலைக்காட்சியில் இருந்து 15 வருட இடைவெளி எடுத்து இவ்வப்போது கௌரவத் தோற்றத்தில் நடித்தார்.
2008 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் அனிஸ்டன்
செல்வம்
2018 இல் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் அனிஸ்டன் ஒருவராவார் [13] இவர் 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஃபோர்ப்ஸ் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் 15 ஆண்டுகளாக இருந்து வருகிறார். போர்ப்சின் பிரபலங்கள் 100 பட்டியலிலும் ("வருமானம் மற்றும் புகழ்" அடிப்படையில்), 2003 இல் முதலிடத்தைப் பிடித்தார். [14][15]
ஒரு பத்திரிகை 2007 இவரது நிகர மதிப்பை $110 மில்லியன் என மதிப்பிட்டுள்ளது[16], 2017 இல் $200 மில்லியன் [17] 2018 இல் இவரது வருமானம் $19.5 மில்லியன் என பட்டியலிடப்பட்டுள்ளது.[18]
தனிப்பட்ட வாழ்க்கை
அனிஸ்டன் ஹத யோகா, புடோகன் கராத்தே ஆகிய பயிற்சி செய்கிறார். [19][20][21] 2014 இல், இவர் தனது ஆழ்நிலை தியானப் பயிற்சியைப் பற்றிப் பேசினார். [22] அடுத்த ஆண்டு, எழுத்து மயக்கம் தனது கல்வியையும் சுயமரியாதையையும் பாதித்ததாகவும், தனது இருபதுகளில் இந்த நோயினைக் கண்டறிந்த பிறகு, வாழ்க்கையைப் பற்றிய இவரது புரிதல் மாறியதாகவும் கூறினார். "நான் புத்திசாலி இல்லை என்று நினைத்தேன். என்னால் எதையும் தக்கவைக்க முடியவில்லை. இப்போது எனது குழந்தைப் பருவ அதிர்ச்சி-இறப்புகள், சோகங்கள், நாடகங்கள் அனைத்தும் விளக்கப்பட்டது போல் உணர்ந்தேன்."[23]
பரோபகாரம்
அனிஸ்டன் பல தொண்டு நிறுவனங்களுக்காக ஒரு பிரபல வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவரது நன்கொடைகளுக்காக பரவலாகக் கவனத்தைப் பெற்றார். செயின்ட் ஜூட்ஸ் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனையின் தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றினார், மேலும் செப்டம்பர் 2008 இன் ஸ்டாண்ட் அப் டு கேன்சர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். [24]பர்மாவை விடுவிப்பதற்கான "இட் கேன்ட் வெயிட்" பிரச்சாரத்தில், அனிஸ்டன் ஒரு நிகழ்படத்தினை இயக்கி நடித்தார். [25] இவர் ஃபிரண்ட்ஸ் ஆஃப் எல் ஃபரோ -வின் ஆதரவாளராவார். இது, மெக்ஸிகோவின் டிஜுவானாவில் உள்ள அனாதை இல்லமான காசா ஹோகர் சியோனுக்கு பணம் திரட்ட உதவும் ஓர் இலாப நோக்கற்ற அமைப்பாகும். [26]
↑Gregoire, Carolyn (March 13, 2013). "10 Celebrities Leading The Wellness Revolution". HuffPost. Archived from the original on April 29, 2014. Retrieved April 29, 2014. Jennifer Aniston is a long-time yoga practitioner – she's appeared in a Yogalosophy DVD and even given Oprah a yoga mat – and she's one of the most famous devotees of TM.