ஜெயந்தியா இராச்சியம்
ஜெயந்தியா இராச்சியம், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தற்கால மேகாலயா மாநிலத்தில் 1500இல் நிறுவப்பட்ட மன்னராட்சிப் பகுதியாகும். இதன் தலைநகர் ஜெயந்தியா மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஜெயந்தியாபூர் நகரம் ஆகும். இந்த இராச்சியத்தை நிறுவியவர் பிரபாத் ராய் ஆவார். 1835இல் ஆங்கிலேய கம்பெனி ஆட்சிப் பகுதியில் ஜெயந்தியா இராச்சியம் இணைக்கப்பட்டது. வரலாறுதுர்கையின் வேறு பெயர்களான ஜெயந்தி தேவி அல்லது ஜெயந்தீஸ்வரி பெயரால் இந்த இராச்சியம் அழைக்கப்பட்டது. [1] விரிவாக்கம்ஜெயந்தியா இராச்சியம் சில்லாங் பீடபூமியின் தெற்கிலும் மற்றும் வடக்கில் அசாமின் பராக் ஆற்றுச் சமவெளி வரை விரிவுபடுத்தப்பட்டது. வரலாறுஜெயந்தியா இராச்சியத்தின் துவக்கம் அறியப்படவில்லை. ஆனால் ஜெயந்தியா மக்கள், காரோ பழங்குடியினர் மற்றும் காசி பழங்குடியினர்களுடன் தொடர்புடையவர்கள். 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெயந்தியா இராச்சியம், ஆங்கிலேய-பர்மியப் போரின் முடிவில், ஜெயந்தியா மன்னர், சுர்மா ஆற்றின் வடபுரப் பகுதியை ஆள கம்பெனி ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்ட்டார். பின்னர் 15 மார்ச் 1835இல் ஜெயந்தியா இராச்சியத்தின் அனைத்துப் பகுதிகளும் கம்பெனி ஆட்சியில் இணைக்கப்பட்டது. ஆட்சியாளர்கள்
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia