இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அல்லது கம்பெனி ஆட்சி (Company rule in India) or (Company Raj),[1].
1757ஆம் ஆண்டில் நடந்த பிளாசி சண்டைக்குப்பின், வங்காள நவாப், பிரிட்டன் கிழக்கிந்திய கம்பேனி நிறுவனத்திடம் சரண் அடைந்த பின், இந்திய துணைக் கண்டத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சி காலூன்றியது.[2] 1765 ஆண்டு முதல் வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் திவானி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது.[3]
1773ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பின், தலைமை ஆளுனர், வாரன் ஏசுடிங்குசு நேரடி நிர்வாகத்தில், கல்கத்தா நகரை தலைமையகமாகக் செயல்பட்டது.[4] கிழக்கிந்திய கம்பேனி நிறுவனம் பல பங்குதாரர்களைக் கொண்ட, லாப நோக்கத்துடன் செயல்படும், தனியார் கூட்டு வர்த்தக நிறுவனம் ஆகும். இதன் நிர்வாகக் குழு மற்றும் தலைமையகம் லண்டனில் அமைந்திருந்தது. கிழக்கிந்திய கம்பேனி தனக்கென காவல் படை, இராணுவப் படை மற்றும் நீதிமன்றங்கள் கொண்டது.
1765 மற்றும் 1805இல் இந்தியா, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பேனி ஆட்சிப் பகுதிகள், இளஞ்சிவப்பு நிறத்தில்.
1837 மற்றும் 1857இல் இந்தியா, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பேனி ஆட்சிப்பகுதிகள் (இளஞ்சிவப்பு நிறத்தில்) மற்றும் பிற பகுதிகள்
இந்தியத் துணைக் கண்டத்தில் வணிகம் செய்து லாபம் ஈட்டும் நோக்கத்தில், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி, பிரித்தானிய வணிகர்களால் லண்டனில் 1600ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தின் மசூலிப்பட்டணக் கடற்கரையில் 1611ஆம் ஆண்டிலும், சூரத்தில் 1612ஆம் ஆண்டிலும், 1640இல் விஜயநகரப் பேரரசின் அனுமதியுடன், சென்னையிலும். பின் பம்பாய் நகரிலும் வணிகக் கூடங்களை திறந்தனர்.
ராபர்ட் கிளைவ் மற்றும் ஆண்ட்ரே பஸ்தாமாண்டி ஆகிய கிழக்கிந்தியக் கம்பேனியின் படைத் தலைவர்களின் தலைமையிலான படைகள், 1757இல் நடந்த பிளாசிப் போர் மற்றும் 1764இல் நடந்த
பக்சார் போர்களில் பெற்ற வெற்றியால், வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் நிலவரி வசூலிக்கும் உரிமையும், 1773இல் கீழ் கங்கைப் பகுதிகளில் பல நிலப்பரப்புகளும் அடைந்தனர்.
தமிழகத்தில் முதன் முதலில் ஆங்கிலேயர் பதினாறாம் நூற்றாண்டில் கால் பதித்தனர்.[8] தற்கால சென்னை நகரத்தில், புனித சார்ச்சு கோட்டையைக் கட்டினர். முதலில் வர்த்தகம் மட்டும் செய்து வந்த ஆங்கில கிழக்கிந்தியக் கம்பனி, பின் மெல்ல மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது. 1684 ஆம் ஆண்டு தென்னாட்டில் உள்ள கம்பனி பிரதேசங்கள், சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில், நடைபெற்ற கர்நாடகப் போர்களால், ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. ஆற்காடு நவாப் மற்றும், ஃபிரஞ்சுப் படைகளை வென்றதால், அவர்களின் ஆதிக்கத்திலிருந்த பல பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தன. ஐதர் அலி, மற்றும் திப்பு சுல்தானை வீழ்த்தியதின் மூலம் மேற்கிலும், கட்டபொம்மன், மருது பாண்டியர் முதலிய பாளையக்காரர்களை வென்றதன் மூலம் சென்னை மாகாணத்தில் கம்பெனி ஆட்சி வலுப்பெற்றது.
இராணுவம் மற்றும் குடிமைப் பணிகள்
1772ஆம் ஆண்டில் வாரன் ஏசுடிங் முதல் கவர்னர் செனரலாக, கொல்கத்தாவில் பதவியேற்றவுடன், கிழக்கிந்தியக் கம்பெனியின், வங்காள மாகாண இராணுவத்தை விரைவாக பெருக்கினார்.
அயோத்தி வீரர்கள், இராசபுதன ராசபுத்திரர்கள் மற்றும் பிராமணர்களை கம்பேனி படையணிகளில் திரட்டினார்.
1796க்குப் பின் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள்[9]
மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போருக்குப்பின் 1791இல் சென்னை மாகாணப் படைகளுக்கு ஆதரவாகவும், சாவா, இலங்கை போன்ற வெளி நாட்டுப் போர்களுக்குத் துணையாக வங்காள மாகாணப் படைகள் பயன்பட்டன.
வேலூர் சிப்பாய் எழுச்சியின் போது, 1806இல் கிழக்கிந்திய கம்பேனியின் படையில் 1,54,500 படைவீரர்களும் அதிகாரிகளும் இருந்தனர்.[10]
தொடர் படையெடுப்புகள் விளைவாக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பேனிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு அமைதி குலைதல். இந்தியாவில் அமைதியை நிலைநாட்ட கார்ன்வாலிஸ் மீண்டும் தலைமை ஆளுனராக நியமிக்கப்படுதல், பின் காஜிப்பூரில் இறத்தல்.
↑Robb 2004, ப. 116–147 "Chapter 5: Early Modern India II: Company Raj", Metcalf & Metcalf 2006, ப. 56–91 "Chapter 3: The East India Company Raj, 1772-1850," Bose & Jalal 2003, ப. 76–87 "Chapter 7: Company Raj and Indian Society 1757 to 1857, Reinvention and Reform of Tradition."
Unknown (1829), Historical and Ecclesiastical Sketches of Bengal; From the Earliest Settlement, Until the Virtual Conquest of that Country by the English, in 1757, Read Online{{citation}}: External link in |publisher= (help)
Bruce, John (1810), Annals of the Honorable East-India Company: from their establishment by the charter of queen Elizabeth, 1600 to the Union of the London and the English East India Companies 1707-8, Vol-I, Read Online{{citation}}: External link in |publisher= (help)