ஜெய்கர் கோட்டை
ஜெய்கர் கோட்டை மற்றும் அரண்மனை (Jaigarh Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் செய்ப்பூர் நகரத்தின் அமேர் பகுதியில், ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது.[1][2] இராசபுத்திர குலத்தவரான மன்னர் இரண்டாம் சவாய் ஜெய்சிங் என்பவர் தனது போர் வெற்றியை கொண்டாடும் நோக்கில் ஜெய்கர் கோட்டை மற்றும் அரண்மனையை, 1726ல் கட்டத்துவங்கினார். [1][2][3] ஆம்பர் கோட்டையின் வடிவத்தில் கட்டப்பட்ட ஜெய்கர் கோட்டையை வெற்றிக் கோட்டை என்றும் அழைப்பர். இக்கோட்டை, வடக்கு - தெற்கில் 3 கிலோ மீட்டர் நீளமும், கிழக்கு - மேற்கில் 1 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கோட்டையின் சுவர்களை எதிரிகள் இடிக்க முடியாத அளவிற்கு உறுதி கொண்டது. இக்கோட்டையின் மேல் உள்ள பீரங்கி, உலகின் பெரிய பீரங்கிகளில் ஒன்றாகும்.[1][4] ஜெய்கர் அரண்மனை வளாகத்தில் லெட்சுமி விலாஸ், லலிதா கோயில், விலாஸ் கோயில் மற்றும் ஆரம் கோயில், ஆயுத சாலை மற்றும் அருங்காட்சியகம் உள்ளது.[2][3][4] ஆம்பர் கோட்டையும், ஜெய்கர் கோட்டையும், பூமிக்கடியில் உள்ள சுரங்கப்பாதை இணைக்கிறது. [4] புவியியல்
ஜெய்கர் கோட்டை, ஆரவல்லி மலைத்தொடரில், 400 மீட்டர் உயரமுடைய ஒரு மலையில், ஆம்பர் கோட்டைக்கு மேலாகக் கட்டப்பட்டுள்ளது.[1] இக்கோட்டையிலிருந்து ஆம்பர் கோட்டை மற்றும் ஆரவல்லி மலைத்தொடர்களை கண்காணிக்கலாம். ஜெய்பூர் - தில்லி செல்லும் நெடுஞ்சாலையில், செய்ப்பூர் நகரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் ஜெய்கர் கோட்டை உள்ளது. வரலாறு![]() முகலாயப் பேரரசர் ஷாஜகான் மறைவிற்குப் பின் ஏற்பட்ட வாரிசுரிமைப் போரின் போது முடிக்குரிய இளவரசர் தாரா சிக்கோ, அவுரங்கசீப்பால் விரட்டப்பட்டு, ஜெய்கர் கோட்டையில் 1658ல் அடைக்கலம் புகுந்தார். படக்காட்சிகள்இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia