ஆம்பர் கோட்டை
ஆம்பர் கோட்டை அல்லது ஆமேர் கோட்டை (Amer Fort or Amber Fort) (Hindi: आमेर क़िला) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆம்பர் நகரத்தில் அமைந்துள்ளது. 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஆம்பர் கோட்டை[1] இராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆம்பர் கோட்டை ஒரு முதன்மைத் தொல்லியல் மற்றும் சுற்றுலா இடமாகும்.[2][3] ஆம்பர் கோட்டை பல திரட்டப்பட்டுள்ள பாதைகளுடன் கூடிய நுழைவாயிற் கதவுகளுடனும் கூடியது. கோட்டையில் பல அரண்மனைகளும், ஒரு ஏரியுடனும் கூடியது.[3][4][5][6][7][8] இந்த ஏரியின் நீர் ஆதாரத்தை நம்பியே கோட்டையும் அரண்மனைகளும் உள்ளது.[9] கோட்டையினுள் உள்ள மணற்கற்களாலும், பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட அரண்மனை திவானி ஆம் எனப்படும் பொது மக்கள் கூடும் மாளிகை, திவானி காஸ் எனப்படும் எனப்படும் அரண்மனைக் குடும்பத்தினர் மட்டும் கூடும் மாளிகை, கண்ணாடி மாளிகை எனப்படும் ஜெய் மந்திர் , செயற்கை நீரூற்றுகளுடன் கூடிய மாளிகை என நான்கு அழகியல் சுற்றுப்புறத்தைக் கொண்ட மாளிகைகளுடன் கூடியது என்பதால் இக்கோட்டையை ஆம்பர் கோட்டை எனப்பெயராயிற்று.[4] ஆம்பர் கோட்டையின் அரண்மனை இராசபுத்திர குல மன்னர்களும்; குடும்பத்தினரும் வாழிடமாக இருந்தது. கோட்டையின் கணபதி நுழைவாயில் அருகில் உள்ள சிலா தேவியின் உருவச்சிலை, தற்கால வங்காள தேசத்தின் ஜெஸ்சூர் இராஜாவை, 1604இல் இராஜா மான் சிங் வெற்றி கொண்டமைக்காக வழங்கப்பட்டது.[3][10][11] இராஜஸ்தானின் மலைக் கோட்டைகளில் ஆம்பர் கோட்டையும், உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.[12][13] பெயர்க் காரணம்![]() பவானி எனும் அம்பாளின் பெயரால் இக்கோட்டைக்கு ஆம்பர் கோட்டை எனும் பெயராயிற்று.[14] நிலவியல்ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ஆமேர் எனும் ஊரில், ஆரவல்லி மலைத்தொடரில் மாதோ ஏரியுடன், அரண்மனைகளுடன் கூடிய ஆம்பர் கோட்டை அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் – தில்லி செல்லும் நெடுஞ்சாலையில் ஆம்பர் கோட்டை உள்ளது.[6] வரலாறுதுவக்கத்தில் ஆம்பர் கோட்டை மீனாக்கள் [15] எனும் மீனவ குலத்தவர்களால் சிறிய அளவில் கட்டப்பட்டது. பின்னர் கச்வாகா இராசபுத்திர குலத்தினர் இப்பகுதியை மீன்னாக்களிடமிருந்து கைப்பற்றி ஆண்டனர். [16] பின்னர் முதலாம் மான் சிங் எனும் இராஜபுத்திர மன்னரால் 21 டிசம்பர் 1550 முதல் 6 சூலை 1614 முடிய ஆளப்பட்டது. இராஜா மான் சிங் என்பவரால் ஆம்பர் கோட்டை 967இல் சற்று சீரமைத்து கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.[6][17][18] கி பி 1600இல் முதலாம் மான் சிங் ஆட்சிக் காலத்தில் ஆம்பர் கோட்டை சீரமைத்து பெரிதாக கட்டப்பட்டது.[17] மன்னர் ஜெய்சிங் ஆட்சிக் காலத்தில் தற்போதைய கோட்டையின் அமைப்புகள் நிறைவு பெற்றது. 1727இல் இரண்டாம் சவாய் ஜெய்சிங் மன்னர், தலைநகரத்தை ஜெய்ப்பூருக்கு மாற்றம் செய்யும் வரை, ஆம்பர் கோட்டை கச்வாகா இராசபுத்திர குல மன்னர்களின் தலைநகராக விளங்கியது.[1][6][7] கி பி 1600 முதலாம் மான் சிங் ஆட்சிக் காலத்தில் ஆம்பர் கோட்டை சீரமைத்து பெரிதாக கட்டப்பட்டது.[17] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேல் வாசிப்பிற்கு
|
Portal di Ensiklopedia Dunia