ஜேகப் ஓரம்
ஜேகப் டேவிட் பிளிப் ஓரம் (Jacob David Philip Oram, பிறப்பு: சூலை 28, 1978)[1], நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் இடதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சாளரும் ஆவார். இவர் சென்ட்ரல் மாவட்ட அணி இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் சிட்டகாங் கிங்ஸ், காஸி டேங் மற்றும் யுவா நெக்ஸ்ட் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1] சர்வதேச போட்டிகள்இவர் 2002 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.டிசம்பர் 12 இல் வெலிங்டனில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 5 பந்துகளில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 15 ஓவர்கள் வீசி 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். இதில் 4 ஓவர்களை மெய்டனாக வீசினார். இவரின் பதுவீச்சு சராசரி 2.06 ஆகும். இவரின் முதல் இலக்காக சச்சின் டெண்டுல்கரின் இலக்கை வீழ்த்தினார்.பின் பார்த்தீவ் படேலின் இலக்கினை வீழ்த்தினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 12 ஓவர்கள் வீசி 36 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 10 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2] இறுதிப் போட்டி2009 ஆம் ஆண்டில் நியூசிலாதுத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.ஆகத்து 26 இல் கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 52 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்து ரங்கன ஹேரத்தின்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 21 ஓவர்கள் வீசி 56 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இதில் 7 ஓவர்களை மெய்டனாக வீசினார். இவரின் பதுவீச்சு சராசரி 2.66 ஆகும். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 148 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப்போட்டியில் இலங்கை அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3] சனவரி 4, 2001 இல் வெலிங்டனில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 4 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4] இறுதிப் போட்டி2012 ஆம் ஆண்டில் நியூசிலாதுத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.நவம்பர் 6 இல் கண்டியில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 4 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்து குசல் மெண்டிசு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசி 43 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 1 ஓவரை மெய்டனாக வீசினார். ஆனல் இவர் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் இலங்கை அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெறி பெற்றது.[5] சான்றுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia