மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் (ஆங்கிலம்: Mumbai Indians) என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணிகளில் ஒன்றாகும். இது மகாராட்டிராவின் மும்பை நகரை அடிப்படையாகக் கொண்டது. 2008இல் தொடங்கப்பட்ட இந்த அணி, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. தற்போது அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா உள்ளார். இந்த அணியின் முன்னாள் தலைவராக சச்சின் தெண்டுல்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகும். இதுவரை நடைபெற்ற 17 தொடர்களில் 5 முறை பட்டம் வென்றுள்ளது. சாம்பின்ஸ் லீக் இ20ப தொடரில் மும்பை இந்தியன்ஸ் 2 முறை பட்டம் வென்றுள்ளது. உரிமைக்குழு வரலாறுசெப்டம்பர் 2007இல், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. அதன் முதல் பருவம் 2008ஆம் ஆண்டில் தொடங்கவிருந்தது. 20 பிப்ரவரி 2008இல் மும்பை உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் மும்பையில் ஏலம் விடப்பட்டன அதில் மும்பை அணியை ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் நிறுவனம் 111.9 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கியது. இதன்மூலம் அந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட அணியாக இருந்தது. முகேசு அம்பானி தலைமையிலான அந்நிறுவனம் மும்பை அணியின் உரிமைக்குழுவை 10 ஆண்டுகளுக்கு வாங்கியிருந்தது. பிறகு அந்த அணிக்கு "மும்பை இந்தியன்ஸ்" என்று பெயரிடப்பட்டது. பருவங்கள்
வீரர்கள் பட்டியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia