ஜோசப் ஹென்றி
![]() ஜோசஃப் ஹென்றி (Joseph Henry, திசம்பர் 17, 1797 – மே 13, 1878) இசுமித்சோனியன் கழகத்தின் முதல் செயலாளராகவும் இந்நிறுவனத்திற்கு முன்னோடியாக இருந்த அறிவியல் ஊக்குவிற்பிற்கான தேசியக் கழகத்தின் நிறுவன உறுப்பினராகவும் பணியாற்றிய அமெரிக்க அறிவியலாளர் ஆவார்.[1] தமது வாழ்நாளில் மிகவும் மதிக்கப்பட்டவராக விளங்கினார். மின்காந்தங்களை உருவாக்குகையில் மின்காந்தவியல் நிகழ்வான தன்-தூண்டத்தை கண்டறிந்தார். தவிரவும் மைக்கேல் பரடே(1791-1867) கண்டறிந்த பரிமாற்றத் தூண்டலை தானும் தன்னிச்சையாக கண்டறிந்தவர்; இருப்பினும் பரடேதான் தனது ஆய்வை முதலில் வெளியிட்டவர்.[2][3] ஹென்றி மின்காந்தத்தை நடைமுறைக்கேற்ற கருவியாக உருவாக்கினார். மின்சார வாயிற்மணிக்கு (குறிப்பாக மின் கம்பி வழியாக சற்றுத்தொலைவில் இருக்கும் மணியை ஒலிக்கச் செய்தல்,1831) முன்னோடியானதொரு கருவியை உருவாக்கினார்.[4] மின்சார உணாத்தியின் முன்னோடியையும் (1835) வடிவமைத்தார்.[5] தூண்டத்திற்கான அனைத்துலக அலகான என்றி இவர் பெயரிலேயே வழங்கப்படுகிறது. இவர் உருவாக்கிய மின்காந்த உணாத்திகளே சாமுவேல் மோர்சும், (1791-1872) சேர் சார்லசு வீட்சுடோனும் (1802-1875) தனித்தனியே கண்டறிந்த நடைமுறை மின்சாரத் தந்திக்கு அடித்தளமாயிற்று. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia