மின்காந்த விசை
மின்காந்த விசை (electromagnetic force) என்பது இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாகும். ஏனையவை வலிய இடைவினை, வலிகுறை இடைவினை, ஈர்ப்பு விசை ஆகியவையாகும். மின்காந்த விசை மின்னூட்டம் பெற்ற துகள்கள் மீது மின்காந்தப் புலம் ஏற்படுத்தும் விசையாகும். இந்த மின்காந்த இடைவினைதான் அணுக்களில் எதிர்மின்னிகளையும் நேர்மின்னிகளையும் பிணைத்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றது. மின்காந்தவிசை ஒளியணுக்கள், மெய்நிகர் ஒளியணுக்கள் போன்ற தூதுத் துகள்களால் பரிமாறப்படுகிறது. இந்த தூதுத் துகள்களின் பரிமாற்றத்தினால் துகள்கள் இழுக்கப்படுவதும் தள்ளப்படுவதுமாக இல்லாது ஓர் நிரந்த விசையை உருவாக்குகின்றது. இந்தப் பரிமாற்றம் பரிமாறப்படும் துகள்களின் தன்மையை மாற்றுகின்றது. வரலாறுதுவக்கத்தில், மின்சாரமும் காந்தவியலும் தனித்தனி விசைகளாக கருதப்பட்டன. 1873இல் ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்லின் மின்சாரம், காந்தவியல் குறித்தான ஆய்வுக்கட்டுரையில் நேர்மறை மற்றும் எதிர்மறை மின்னூட்டுக்களிடையேயான இடைவினைகள் ஒரே விசையால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன என்ற கண்டறிதலுக்குப் பிறகு இவை தனித்தனியான விசைகளல்ல என அறியப்பட்டது. இந்த இடைவினைகள் மூலமாக கூழ்காணும் நான்கு முக்கிய தாக்கங்கள் ஏற்படுவதாக இந்த சோதனை தெளிவாக எடுத்துக்காட்டியது:
மேலோட்டம்மின்காந்த விசை நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாகும். மற்ற நான்கு அடிப்படை விசைகளாவன: அணுவின் கருப் பெருவிசை (இவை குவார்க்குகளை பிணைத்து மீதமுள்ள வலிய விசைத் தாக்கத்தால் அணுக்கருவை பிணைத்து அணுக்கருவை உருவாக்குகின்றன), மென் விசை (இவை சிலவகை கதிரியக்கங்களுக்கு காரணமாகின்றன), மற்றும் ஈர்ப்பு விசை ஆகும். மற்ற அனைத்து விசைகளுமே இந்த நான்கு விசைகளிலிருந்து பெறப்பட்டவையாம். மின்காந்தவிசை நமது வாழ்வின் பல நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது; மற்றது பொருளீர்ப்பு விசை. அணுக்களில் நிகழும் அனைத்து இடைவினைகளுமே நேர்மின்னிகள், எதிர்மின்னிகள் மீதான மின்காந்த விசையின் தாக்கங்களாக அடையாளப்படுத்த முடியும். மூலக்கூறுகளுக்கிடையேயான மூலக்கூற்று இடைவிசைகளும் வேதி நிகழ்வுகளும் இவற்றில் அடங்கும். மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia