டயர் நகரம்
டயர் (Tyre) (அரபி: صور Ṣūr; போனீசியம்: 𐤑𐤓 Ṣūr; சிரியாக்: ܣܘܪ, எபிரேயம்: צוֹר Tzór; கிரேக்கம்: Τύρος Týros; இலத்தீன்: Tyrus; ஆர்மீனியம்: Տիր Tir; French: Tyr; லெபனிய பிரான்சு மொழியில் சௌர் (Sour) என்றும் அழைப்பர்.இது லெபனான் நாட்டின் தெற்கு ஆளுநகரத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கே 39.5 கிலோ மீட்டர் தொலைவில் சிதோன் நகரமும்; இதன் கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் பின்த் ஜபீல் நகரம் உள்ளது. உலகில் பல்லாண்டுகளாக தொடர்ந்து மக்கள் வாழும் நகரங்களில் டயர் நகரமும் ஒன்று. இந்நகரத்தில் கிமு 2750 முதல் தற்போது வரை மக்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். இந்நகரம் பண்டைய அண்மை கிழக்குப் பகுதியின் வளமான பிறை பிரதேசத்தில் மத்தியதரைக் கடலின் கிழக்குக் கடற்கரையில் தற்கால லெபனான் நாட்டின், அமைந்த டயர் நகரம், டயர் மாவட்டம் மற்றும் தெற்கு ஆளுநகரத்தின் தலைமையிடமாக உள்ளது. 2003-ஆம் கணக்குப்படி, இந்நகரம் 1,17,000 மக்கள்தொகை கொண்டிருந்தது.[1] லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூத்திற்கு தெற்கே 80 கிமீ தொலைவில் டயர் நகரம் உள்ளது. இதன் வடக்கில் 40 கிமீ தொலைவில் சிடோன் நகரம் உள்ளது. டயர் என்பதற்கு பாறை என்பது பொருளாகும்.[2] பண்டைய காலத்தில் இந்நகரம் பாறைகளின் மீது கட்டப்பட்டதால் இதனை டயர் என அழைக்கப்படுகிறது. லெபனான் நாட்டில் தற்போது ஐந்தாதவது பெரிய நகரம் டயர் ஆகும். மற்ற நகரங்கள் பெய்ரூத், திரிபோலி, அலெய் மற்றும் சிதோன் ஆகும்.[3] இங்கு லெபனான் நாட்டின் பெருந் துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாத் துறை முக்கியத் தொழில் ஆகும். இந்நகரத்தில் பண்டைய உரோமானியர்கள் நிறுவிய டயர் நகரம், உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.[4][5] வரலாறு![]() ![]() ![]() பண்டைய காலத்தில் கிரேக்கர்கள் டயர் நகரத்தைச் சுற்றி பெரும் கோட்டை கட்டியிருந்தனர். வெண்கலக் காலம் மற்றும் இரும்புக் காலம்கிரேக்க வரலாற்று அறிஞர் எரோடோட்டசுவின் கூற்றுப்படி, கிமு 2750-இல் கோட்டைச் சுவருடன் கட்டப்பட்ட பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாக டயர் நகரம் விளங்கியிருந்தது.[7] கிமு 17-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை டயர் நகரம் எகிப்தின் மத்தியகால இராச்சியம் மற்றும் எகிப்தின் புது இராச்சியத்தின் கீழ் இருந்தது. இராச்சியத்தின்]] பண்டைய இஸ்ரவேல் இராச்சியத்தின் (கி.மு. 1030 – கி.மு. 930) மன்னர்களான தாவீது மற்றும் சாலமோன் ஆகியோர் போனீசியா நாட்டை பிலிஸ்தியர்களிடமிருந்து கைப்பற்றி ஆண்டனர். அப்போது டயர் நகரத்தையும் தங்களின் இராச்சியப் பகுதியில் இணைத்துக் கொண்டனர். பண்டைய டயர் நகரத்தின் துறைமுகம் கிரேக்க, உரோம மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும், பண்டைய அண்மை கிழக்கு நாடுகளுக்கும் வணிக மையமாக விளங்கியது. பிலிஸ்தியர்களின் உதவியுடன் புது அசிரியப் பேரரசர் ஐந்தாம் சல்மானேஸ்வரர், டயர் நகரத்தை ஐந்தாண்டுகள் கைப்பற்றி வைத்திருந்தார்.[8] கிமு 612-இல் புது அசிரியப் பேரரசு வீழ்ச்சியயடைந்த போது, டயர் நகரத்தை கிமு 586 வரை புது பாபிலோனியப் பேரரசுவின் கீழ் சென்றது.[8] பாரசீகர் ஆட்சியில்![]() பாரசீக அகாமனிசியப் பேரரசுவின் ஆட்சியில், கிமு 539 முதல் கிமு 332 டயர் நகரம் இருந்தது.[9] ![]() கிரேக்கர்களின் ஆட்சியில்மாசிடோனியாவின் அலெக்சாண்டர் 332-இல் போனீசியாவின் டயர் நகரத்தை ஏழு மாத முற்றுக்கைப்பின் கைப்பற்றினார்.[9][10] போரில் வீழ்ந்த 30,000 டயர் நகர மக்களை கிரேக்கர்கள் அடிமைகளாக விற்றனர் அல்லது கொன்றனர். அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின் ஹெலனிய காலத்தின் போது கிமு 306-இல் கிரேக்கப் படைத்தலைவர் ஆண்டிகோணஸ் டயர் நகரம் உள்ளிட்ட சிரியா, துருக்கி, மற்றும் கிரேக்கப் பகுதிகளுக்கு பேரரசர் ஆனார். பின்னர் டயர் நகரம் செலூக்கியப் பேரரசின் கீழ் சென்றது. கிமு 126-இல் செலூக்கியப் பேரரசிடமிருந்து டயர் நகரம் விடுதலைப் பெற்றது.[11] உரோமர்களின் ஆட்சியில்![]() கிறித்தவர்களின் புதிய ஏற்பாடு நூலில் இயேசு கிறிஸ்து தனது பரப்புரைகளை சிதோன் பகுதிகளில் மேற்கொண்டதாக அறிவிக்கிறது. உரோமைப் பேரரசு ஆட்சியில் கிபி 304-இல் டயர் நகர கிறிஸ்துவர்கள் 500 பேர் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டனர்.[12] பைசாந்திய ஆட்சியில்கிபி 395-இல் பைசாந்தியப் பேரரசு ஆட்சியில் டயர் நகரத்தில் பட்டுத் தொழில், கண்ணாடித் தொழில் மற்றும் சாயத் தொழில்கள் செழித்தன. பைசாந்திய பேரரசிடமிருந்து டயர் நகரத்தை சாசானியப் பேரரசினர் கைப்பற்றினர். பின்னர் கிபி 638-இல் இசுலாமிய படைகளுப்புகளால் ராசீதீன் கலீபகத்தின் கீழ் சென்றது. இசுலாமிய ஆட்சியில்கிபி 635-இல் அரேபிய இசுலாமிய ராசிதீன் கலீபகங்களின் தொடர் படையெடுப்புகளால் டயர் நகரம் கலீபா இராச்சியத்தின் கீழ் சென்றது. 998-இல் டயர் நகரம் எகிப்தின் பாத்திமா கலீபகத்தின் கீழ் சென்றது. 1086-இல் டயர் நகரம் துருக்கிய-பாரசீக கலப்பின செல்யூக் பேரரசின் கீழ் சென்றது. ஆனால் 1089-இல் மீண்டும் டயர் நகரம் எகிப்தின் பாத்திமா கலீபகத்தின் ஆட்சிகுற்பட்டது. சிலுவைப் போர்க் காலம்7 சூலை 1124-இல் முதல் சிலுவைப் போரின் போது டயர் நகரம் கிறிஸ்துவப் படைகளால் கைப்பற்றப்பட்டது.[13][14] பின்னர் டயர் நகரம் எருசலேம் பேரரசின் கீழ் சென்றது. எகிப்தின் மம்லுக் சுல்தானக காலம்கிபி 1291-இல் எகிப்திய மம்லுக் சுல்தான்கள் டயர் நகரத்தைக் கைப்பற்றினர். உதுமானியப் பேரரசுக் காலம்![]() ![]() 1516-17-இல் துருக்கியின் உதுமானியப் பேரரசினர் டயர் நகரத்தை கைப்பற்றினர். முதல் உலகப் போரின் போது பிரான்சு நாட்டுப் படைகள் உதுமானியப் பேரரசின் படைகளை வென்று, டயர் நகரத்தில் இராணுவ தளத்தை அமைத்தனர். நவீன டயர் நகரம்பிரான்சு காலனி ஆதிக்கத்தில்1920-இல் சியா இசுலாமியர்களை வென்று பிரான்சு நாட்டு அரசு டயர் நகரத்துடன் கூடிய பெரிய லெபனான் எனும் காலனியாதிக்க நிலப்பரப்பை நிறுவினர்.[15] 1943-இல் டயர் நகரத்துடன் லெபனான் நாடு, பிரான்சு காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. மக்கள்தொகை பரம்பல்டயர் நகரத்தின் இசுலாமியர்களில் பெரும்பாலானவர்கள் சியா இசுலாமியர்கள ஆவார். கிறித்தவர்கள் சிறுபான்மையாக உள்ளனர். டயர் நகரத்தில் 60,000 பாலஸ்தீன சன்னி இசுலாமிய அகதிகள் உள்ளனர். மேலும் 2015-இல் 2500 சிரியா நாட்டு அகதிகள் உள்ளனர்.[16] 2010-ஆம் ஆண்டு கணக்குப்படி, டயர் நகரத்தின் மொத்த மக்கள்தொகையில் கிறித்தவர்கள் 15% ஆக உள்ளனர்.[17] 2017-ஆம ஆண்டு கணக்குப்படி டயர் நகரத்தில் 42,500 கத்தோலிக்க கிறித்தவரகள் உள்ளனர்.[18] டயர் நகரத்தின் தொல்லியல் எச்சங்கள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் டயர் நகரம் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
|
Portal di Ensiklopedia Dunia