டான் பிரவுன்
டேனியல் கெர்ஹார்ட் பிரவுன் (Daniel Gerhard Brown பிறப்பு சூன் 22, 1964) ஓர் அமெரிக்க எழுத்தாளர், ராபர்ட் லாங்டன் புதினங்களான ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் (2000), தி டா வின்சி கோட் (2003), தி லாஸ்ட் சிம்பல் (2009), இன்பெர்னோ (2009) மற்றும் ஆரிஜின் (2017) ஆகிய பரபரப்பு புதினங்களுக்காக பரவலாக அறியப்படுபவராவார். 2013). இவரது புதினங்கள் பொதுவாக 24 மணி நேரத்தில் நடக்கும் புதையல் வேட்டைகளை அடிப்படையாகக் கொண்டவை. [3] இவை குறியாக்கவியல், கலை மற்றும் சதி கோட்பாடுகளின் தொடர்ச்சியான கருப்பொருள்களைக் கொண்டுள்ளன. இவரது புத்தகங்கள் 57 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, 200 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அவற்றில் மூன்று, ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ், தி டா வின்சி கோட் மற்றும் இன்பெர்னோ ஆகிய மூன்று புதினங்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன, அவற்றில் தி லாஸ்ட் சிம்பல், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக எடுக்கப்பட்டது. ராபர்ட் லாங்டன் புதினங்கள் கிறிஸ்தவ கருப்பொருள்கள் மற்றும் வரலாற்றுப் புனைகதைகளுடன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவை. அதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. பிரவுன் தனது இணையதளத்தில் தனது புத்தகங்கள் கிறிஸ்தவத்திற்கு எதிரானவை அல்ல என்றும், தான் ஒரு "நிலையான ஆன்மீக பயணத்தில்" இருப்பதாகவும் கூறுகிறார். [4] இவர் தனது புத்தகமான தி டாவின்சி கோட் "ஆன்மீக விவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பொழுதுபோக்கு கதை" என்றும், "நமது நம்பிக்கையை உள்வாங்குவதற்கும் ஆய்வு செய்வதற்கும் ஒரு நேர்மறையான ஊக்கியாக" இது பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறுகிறார். [5] ஆரம்பகால வாழ்க்கைடேனியல் கெர்ஹார்ட் பிரவுன் சூன் 22, 1964 அன்று நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள எக்செட்டரில் பிறந்தார். [6] இவருக்கு வலேரி (பிறப்பு 1968) எனும் ஒரு தங்கை, மற்றும் கிரிகோரி (பிறப்பு 1974) எனும் சகோதரர் உள்ளார். பிரவுன் ஒன்பதாம் வகுப்பு வரை எக்செட்டரின் பொதுப் பள்ளிகளில் பயின்றார். [7] பிலிப்சு எக்செட்டர் அகாதமியின் வளாகத்தில் வளர்ந்தார், அங்கு அவரது தந்தை ரிச்சர்ட் ஜி. பிரவுன் கணித ஆசிரியராக இருந்தார் மற்றும் 1968 முதல் 1997 இல் ஓய்வு பெறும் வரை பாடப்புத்தகங்களை எழுதினார். [8] [9] இவரது தாயார், கான்சுடன்சு, ஒரு தேவாலய அமைப்பாளராகவும், புனித இசையின் மாணவராகவும் பயிற்சி பெற்றார். [7] பிரவுன் ஒரு எபிசுகோபாலியனாக வளர்க்கப்பட்டார்.[8] சொந்த வாழ்க்கைபிரவுன் மற்றும் அவரது மனைவி பிளைத் நியூலோன் ஆகியோர் நியூ ஹாம்பசயர் அறக்கட்டளையின் ஆதரவாளர்களாக இருந்தனர். [10] [11] 2019 இல், திருமணமான 21 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரவுனும் அவரது மனைவியும் விவாகரத்து செய்தனர், அவர்களது திருமணத்தின் பிற்பகுதியில் சிக்கல்கள் காரணமாக நிதித் தீர்வு முடிக்கப்படவில்லை. [12] திசம்பர் 2021 இல், தம்பதியினர் வழக்கைத் தீர்க்க ஒப்புக்கொண்டனர். [13] நூற்பட்டியல்தனித்துவ புதினங்கள்
இராபர்ட் லாங்டன் புதினங்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia