வாயேஜர் 2 அனுப்பிய டிரைட்டனின் நெப்ட்யூனிய அரைக்கோளத்தின் ஒளிப்படம். கீழேயுள்ள பளீரெனும், சற்றே இளஞ்சிவப்பான, தெற்கு முனைய முனை நைதரசன் மற்றும் மீதேன் பனிக்கட்டிகளாலானது; அவற்றின் மீது நைதரசன் வளிம சுடு பாய்ம ஆக்கிகள் விட்டுச்சென்ற தூசுத்துகள்கள் கற்றையாகக் காண்கின்றன. பெரும்பாலும் கருமையான மேல்பகுதியில் டிரைட்டனின் "கேன்டலூப் தரை"யும் பனிக்கட்டி எரிமலைகளும் புவித்தட்டு அமைப்புக்களையும் காணலாம். கீழ் வலதுபுறத்தில் பல அடர்நிற வினோத புள்ளிகளை (maculae)க் காணலாம்.
டிரைட்டன் (Triton) என்பது நெப்டியூன்கோளின் மிகப் பெரும் நிலவு ஆகும். ஆங்கிலேய வான்வெளியியலாளர் வில்லியம் லாசெல் 1846, அக்டோபர் 10 அன்று இதனைக் கண்டறிந்தார். சூரியக் குடும்பத்திலேயேஎதிர்ச் சுற்றில் (கோளின் சுற்றும் திசைக்கு எதிர்த்திசையில்) வலம் வருகின்ற பெரிய நிலவாக டிரைட்டன் விளங்குகிறது. 2,700 கி.மீ. விட்டமுள்ள, இந்த நிலவு சூரியக் குடும்பத்திலேயே ஏழாவது பெரிய நிலவாக உள்ளது. இதன் எதிர்ச்சுற்றுத் தன்மையாலும் தனிமக் கலப்பு புளூட்டோவினுடையதைப் போலவே உள்ளதாலும் கைப்பர் பட்டையிலிருந்து கைப்பற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.[10] டிரைட்டனின் மேற்பரப்பில் உறைந்த நைதரசன், தண்ணீர் பனிக்கட்டிகளிலான தரைப்பரப்பும் [11] இவற்றினடியே கல்லும் மாழையும் கொண்ட கருவகமும் உள்ளது.[5] மொத்தத் திண்மையில் மூன்றில் இரு பாகம் கருவகம் கொண்டுள்ளது.டிரைட்டனின் சராசரி அடர்த்தி 2.061 கிராம்கள் per கன சதுர சென்டிமீட்டர் (0.0745 lb/cu in)[4] யில் ஏறத்தாழ 15–35% தண்ணீர் பனிக்கட்டிகளாலானது.[5]
கண்டுபிடிப்பும் பெயரிடலும்
வில்லியம் லாசல், டிரைட்டனைக் கண்டுபிடித்த வானியலாளர்
டிரைட்டன் துணைக்கோளானது நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டுப் 17 நாட்களில் அக்டோபர் 10, 1846 இல் வில்லியம் லாசல் என்ற பிரித்தானிய வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.[12] 1820 இல் வில்லியம் லாசல் தனது அமெச்சூர் தொலைநோக்கிக்கு கண்ணாடிகளைச் செய்வதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட ஜோன் ஹேர்செல், அதற்குத் துணைக்கோள்கள் உள்ளதா எனத் தேடிப் பார்க்கும்படி ஒரு கடிதம் எழுதினார். வில்லியம் லாசலும் தேடிப் பார்த்துக் கடிதம் கிடைத்த எட்டு நாட்களின் பின்னர் டிரைட்டனைக் கண்டுபிடித்தார்.[13][12]
குறிப்புகள்
↑
Surface area derived from the radius r: 4*pi*r2.
↑ 5.05.15.25.35.4
"Encyclopedia of the Solar System". (2nd). (2007). Ed. Lucy Ann Adams McFadden, Lucy-Ann Adams, Paul Robert Weissman, Torrence V. Johnson. Amsterdam; Boston: Academic Press. 483–502. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-12-088589-3.
↑Craig B Agnor, Douglas P Hamilton (May 2006). "Neptune's capture of its moon Triton in a binary–planet gravitational encounter". Nature441 (7090): 192–194. doi:10.1038/nature04792. பப்மெட்:16688170. Bibcode: 2006Natur.441..192A.
↑ 12.012.1William Lassell (November 12, 1847). "Lassell's Satellite of Neptune". Monthly Notices of the Royal Astronomical Society8 (1): 8. Bibcode: 1847MNRAS...8....9B.
↑William Lassell (November 13, 1846). "Discovery of Supposed Ring and Satellite of Neptune". Monthly Notices of the Royal Astronomical Society7 (9): 157. Bibcode: 1846MNRAS...7..157L. William Lassell (December 11, 1846). "Physical observations on Neptune". Monthly Notices of the Royal Astronomical Society7 (10): 167–168. Bibcode: 1847MNRAS...7..297L. Lassell, W. (1847). "Observations of Neptune and his satellite". Monthly Notices of the Royal Astronomical Society7 (17): 307–308. doi:10.1002/asna.18530360703. Bibcode: 1847MNRAS...7..307L.