புளூட்டோ (Pluto, வழமையான குறியீடு: 134340 புளூட்டோ; சின்னங்கள்: [15] மற்றும் [16]) அல்லது சேணாகம் என்பது கதிரவ அமைப்பில் (ஏரிசுவை அடுத்து) இரண்டாவது பெரிய குறுங்கோளும்கதிரவனை நேரடியாகச் சுற்றிவரும் ஒன்பதாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் கதிரவனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது. நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது.[h] புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன.
கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது. புவியின் நிலவின் ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது. இது மிக அதிக சாய்வான பிறழ்மையச் சுற்றுப்பாதை விலகலை (சூரியனில் இருந்து 30 முதல் 49 வானியல் அலகு (4.4–7.4 பில்லியன் கி.மீ.)) உடையது. இதனால் புளூட்டோ நெப்டியூனை விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருகிறது. 2011 ஆம் ஆண்டின் படி, புளூட்டோ சூரியனில் இருந்து 32.1 வாஅ தூரத்தில் இருந்தது[17]
வகைப்பாடு
கோள் என்பதற்கான அனைத்துலக வானியல் கழகத்தின் வரையறை:
கதிரவ அமைப்பில் உள்ள விண்பொருள் ஒன்று கோள் என்றழைக்கப்பட வேண்டும் எனில்:
அப்பொருள்
நிலைநீர் சமநிலையை (கிட்டத்தட்ட கோள வடிவம்) எட்டுவதற்குத் தகுந்த நிறையைப் பெற்றிருக்க வேண்டும்.
தன் சுற்றுப்பாதைச் சூழலில் ‘அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும்’.
புளூட்டோவும் அதையொத்த குறுங்கோள்களும் முதலிரண்டு நிபந்தனைகளை எட்டியிருந்தாலும் மூன்றாவது ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’ நிபந்தனையை எட்டாததால், அவற்றை கோள் எனக்கூற முடியாது.
கீழ்வருவன புளூட்டோ மற்றும் அதன் துணைக்கோள்களின் அளவைகள் ஆகும்.
புளூட்டோவும் அதன் துணைக்கோள்களும்
பெயர்
கண்டுபிடித்த ஆண்டு
விட்டம் (கிலோமீட்டர்கள்)
நிறை (நிலவின் கிலோகிராம்கள்)
சுற்றாரம் (கிலோமீட்டர்கள்)
சுற்றுக்காலம் (d)
பருமன் (mag)
புளூட்டோ
1930
2,306 (66% நிலவு)
1.305 ×1022 (18% நிலவு)
2,035
6.3872 (25% நிலவு)
15.1
சரோன்
1978
1,205 (35% நிலவு)
1.52 ×1021 (2% நிலவு)
17,536 (5% நிலவு)
6.3872 (25% நிலவு)
16.8
எஸ் 2012
2012
10–25
?
~42,000 +/- 2,000
20.2 +/- 0.1
27
நிக்சு
2005
91
4 ×1017
48,708
24.856
23.7
எஸ் 2011
2011
13–34
?
~59,000
32.1
26
ஐடுரா
2005
114
8 ×1017
64,749
38.206
23.3
இவை தவிர்த்து புளுட்டோவின் அரைகுறை துணைக்கோளாக (15810) 1994 ஜே.ஆர்.1 உள்ளது. இது ஏற்கனவே புளூட்டோவின் ஒரு துணைக்கோளாக 10 இலட்சம் ஆண்டுகள் இருந்துள்ளது. இன்னும் இருபது இலட்சத்திலிருந்து இருபத்தியைந்து இலட்சம் ஆண்டுகள் இது புளூட்டோவின் துணைக்கோளாக இருக்கும்.
↑இங்குள்ள சராசரிக் கூறுகள், IMCCE மூலம் வெளிக்கோள்களின் கோட்பாடு (TOP2013) தீர்வில் இருந்து பெறப்பட்டவை. அவை நிலையான சம இரவு நாள் J2000, சூரிய குடும்பத்தின் கனமையம் மற்றும் ஊழி J2000 ஆகியவற்றைக் குறிக்கின்றன.
↑ஒரு கோளத்துடன் ஒத்துப்போகும் அவதானிப்புகள், அனுசரிக்க முடியாத அளவுக்கு சிறிய விலகல்கள் கணிக்கப்பட்டுள்ளன.[4]
↑மேற்பரப்பளவு இலிருந்து கணிக்கப்பட்டது, இங்கு r - ஆரை.
↑கனவளவு v, இலிருந்து கணிக்கப்பட்டது, இங்கு r - ஆரை.
↑மேற்பரப்பு ஈர்ப்புவிசை இலிருந்து கணிக்கப்பட்டது. இங்கு G - புவியீர்ப்பு மாறிலி, m -திணிவு, r - ஆரை.
↑ 5.05.1Stern, S. A.; Grundy, W.; McKinnon, W. B.; Weaver, H. A.; Young, L. A. (2017). "The Pluto System After New Horizons". Annual Review of Astronomy and Astrophysics2018: 357–392. doi:10.1146/annurev-astro-081817-051935. Bibcode: 2018ARA&A..56..357S.