டி. ஜி. வெங்கட்ராமன்
டி. ஜி. வெங்கட்ராமன் (2 பிப்ரவரி 1931 - 21 பிப்ரவரி 2013) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திமுக உறுப்பினராவார். ஆரம்ப கால வாழ்க்கைதிண்டிவனம் ஜி. வெங்கட்ராமன் 1931 பிப்ரவரி 2 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் பிறந்தார். இவரது தந்தை வி. கோபால கவுண்டர். இவர் வன்னிய கௌண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.[1] இவர் திருமதி. வி. வசந்தவை 0760 மே 8 அன்று மணந்தார். இந்த இணையருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உண்டு. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், மதராஸ் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பி.எல் பட்டமும் பெற்றார். இவர் மறைந்த திரு. நாராயணசாமி முதலியார் (தமிழ்நாட்டின் முன்னாள் சட்ட அமைச்சர்) இடம் சென்னையில் இளவல் வழக்கறிஞராக பணியாற்றினார், பின்னர் திண்டிவனம் மற்றும் தென்னாற்காடு முழுவதும் வழக்கறிஞராக பணிபுரிந்தார். இவர் 2013 பெப்ரவரி 21 அன்று தனது 82 வது வயதில் இறந்தார்.[2] அரசியல் வாழ்க்கைஇவர் திமுக உறுப்பினராகவும் ஆதரவாலராகவும் இருந்தார். 1977 ஆம் ஆண்டில் திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலுல் போட்டியிட்டு இதேகாசின் டி. ஆர். இராஜாராம ரெட்டியிடம் தோல்வியுற்றார் 1989இல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1995 வரை பணியாற்றினார். இவர் திமுக சார்பில் 1996 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு பதினோன்றாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட இதேகா சேர்ந்த திண்டிவணம் கே. ராமமூர்த்தியை 190, 276 வாக்குகள் வித்தியாசத்தில் தோறகடித்தார். ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சராக (தனிப்பொறுப்பு) நியமிக்கப்பட்டார். வகித்த பதவிகள்
சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia