வன்னியர்
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர்.[1][2] இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[3] இவர்கள் முன்னொரு காலத்தில் பள்ளிகள் என்ற பெயரால் அறியப்பட்டனர். சொற்பிறப்புவன்னியருக்கான பல சொற்பிறப்பியல் கருத்துகள் உள்ளன, சமசுகிருதத்தில் வன்னி என்னும் சொல்லுக்கு (நெருப்பு/தீ) என்று பொருள்[4][5] மற்றும் திராவிடத்தில் (வலிமை) என்பதாகும்.[6] அதாவது நெருப்பிலிருந்து (அக்னி/தீ) பிறந்தவர் என்று பொருள்படும். பள்ளி என்னும் சொல்லுக்கு சமசுகிருதத்தில் வனம் (காடு) என்பதாகும்.[7] வன்னி என்னும் பெயரிலிருந்து வன்னியர்கள் தங்கள் சாதி பெயரைப் பெறுகிறார்கள் என்று அல்ஃப் ஹில்ட்பெடில் குறிப்பிடுகிறார்.[5] வன்னி என்ற வார்த்தை சமசுகிருத மொழியில் நெருப்பு என்று கருதப்படுகிறது. ஆனால் தமிழ் மொழியில் இது ஒரு முக்கியமான மரத்தின் பெயராகும். இது முனிவரின் தொடர்பு, மேலும் புராணங்களுடன் தொடர்புகளுக்கு இது வழிவகுக்கிறது.[8] வன்னியர் குல பட்டங்கள்படையாட்சி, பள்ளி, கவுண்டர், நாயக்கர், சம்புவரையர், காடவராயர், கச்சிராயர், காலிங்கராயர், மழவரையர், உடையார், சோழிங்கர் போன்ற 50-க்கும் மேற்பட்ட பட்டங்களை கொண்ட சாதியினர் ஆவார்.[9] வன்னியர்களின் அடையாளமாக வன்னி மரம் கருதப்படுகிறது.[8] வன்னி மரம் தல விருட்சமாக, தஞ்சை பெரிய கோயிலிலும் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும் உள்ளது. பிற பெயர்கள்இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர். அதில் வன்னிய குல சத்திரியர், வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னி குல சத்திரியர் போன்ற பிற பெயர்களும் அடங்கும்.[10] சிலை எழுபதுகம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். இந்நூலில் வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள, கம்பர் இந்நூலை எழுதியுள்ளார்.
மக்கள் தொகைதமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி வன்னியர்கள் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர் வசிக்கின்றனர். தமிழகத்தில் மக்கள் தொகை அடிப்படையில், இவர்களே மிகப்பெரிய சமுதாயத்தினர் ஆவர்.[11] தற்போதுவன்னியர்கள் 1980 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தனர். குறிப்பாக செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 25 சதவீதத்திற்கு அதிகமான மக்கள் இருந்தனர். வன்னியர்கள் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் அமைப்பிலிருந்து பெருமளவில் பயனடைகிறார்கள். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த இவர்கள், 1980 ஆம் ஆண்டுகளில் பல போராட்டங்களைத் தொடர்ந்து, அதில் வெற்றிக் கண்டு தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர். இந்த சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக வளர்ந்து, தமிழகத்தில் தற்போது முக்கியமான அரசியல்கட்சிகளில் ஒன்றாக உள்ளது. உள்ஒதுக்கீடு2020 ஆம் ஆண்டு, வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு தர வேண்டும் என பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது தமிழக அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்தது. ஆனால் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு, மிகவும் பிற்படுத்தபட்டோர் பிரிவில் உள்ஒதுக்கீடு தேவை என கோரினார். அவரின் கோரிக்கையை ஏற்று மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியீடப்பட்டது. அதன்படி வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தபட்டோர் பிரிவில் 10.5%. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது.[12][13] குறிப்பிடத்தக்க நபர்கள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia