டி. மஞ்சுநாத்து
டி. மஞ்சுநாத்து (D. Manjunath) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] 1928 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1967 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு முதன் முதலில் கருநாடக சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1977 ஆம் ஆண்டு மஞ்சுநாத்து சனதா கட்சியில் சேர்ந்தார். இக்கட்சியின் கருநாடக மாநிலத் தலைவராகவும் இவர் இருந்துள்ளார். 1983 ஆம் ஆண்டு கருநாடகாவின் சட்ட மேலவை உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார். 1985-1987 காலக்கட்டத்தில் மஞ்சுநாத்து பல்வேறு அமைச்சகங்களில் அமைச்சராகப் பணிபுரிந்தார்.[3] 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று கருநாடகாவின் சட்ட மேலவையிமன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] செயதேவப்பா ஆலப்பா அமைச்சரவையில் மஞ்சுநாத்து வருவாய்த்துறை அமைச்சராக பணிபுரிந்தார்.[4] 2004-2006 ஆம் ஆண்டு காலத்தில் தரம்சிங் அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றினார்.[3] 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதியன்று மஞ்சுநாத் காலமானார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia