டெர்பியம்(III) பெர்குளோரேட்டு
டெர்பியம்(III) பெர்குளோரேட்டு (Terbium(III) perchlorate) என்பது Tb(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியம்(III,IV) ஆக்சைடுடன் பெர்குளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து இந்த டெர்பியம்(III) உப்பு உருவாகிறது.[4] பெர்குளோரேட்டுகள் ஒருங்கிணைக்கப்படாத அயனிகள் என்பதால் டெர்பியம்(III) அணைவுச் சேர்மங்களை உருவாக்குவதற்கான தொடக்கப் பொருளாக இதைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, அலானினுடன் டெர்பியம்(III) பெர்குளோரேட்டு ஈடுபடும் வினையில் ஓர் அணைவுச் சேர்மம் உருவாகிறது. இந்த அணைவுச் சேர்மத்தின் கார்பாக்சிலேட்டுப் பகுதியின் நான்கு அலானின் அலகுகள் இரண்டு டெர்பியம் அணுக்களுக்கு இடையே பாலம் அமைக்கின்றன.[5] டெர்பியம் கொண்ட உலோக-கரிமக் கட்டமைப்பு பொருட்களை தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது.[6][7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia