டைகுளோரின் எக்சாக்சைடு (Dichlorine hexoxide) என்பது Cl2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். வாயு நிலையில் இவ்வாய்ப்பாடு சரியானதாகும். எனினும் நீர்ம அல்லது திண்ம நிலையில் இக்குளோரின் ஆக்சைடு அடர் சிவப்பு அயனிச்சேர்மம் குளோரைல் பெர்குளோரேட்டு [ClO2]+[ClO4]− அயனியாக அயனியாக்கம் அடைகிறது. குளோரிக் மற்றும் பெர்குளோரிக் அமிலங்களின் கலப்பு நீரிலியாக இது கருதப்படுகிறது.
குளோரின் டையாக்சைடு மற்றும் மிகையளவு ஓசோன் இரண்டும் வினைபுரிவதால் டைகுளோரின் எக்சாக்சைடு உற்பத்தியாகிறது.
2 ClO2 + 2 O3 → 2 ClO3 + 2 O2 → Cl2O6 + 2 O2
மூலக்கூற்று கட்டமைப்பு
வாயு நிலையில் அசலாக ஒரும குளோரின் டிரையாக்சைடு (ClO3) கட்டமைப்பில் டைகுளோரின் எக்சாக்சைடு இருப்பதாக விவரிக்கப்பட்டது [1]. ஆனால் ஆவியாதலுக்குப் பின் குளோரின் பெர்குளோரேட்டு (Cl2O4) மற்றும் ஆக்சிசனாக சிதைவடையும் வரை அது ஆக்சிசன்-பால இருபடியாக எஞ்சியிருப்பது பின்னர் காட்டப்பட்டது [2].ClO3 சேர்மம் பின்னர் மீள்கண்டுபிடிப்பு செய்யப்படுகிறது[3].
அறைவெப்பநிலையில் அடர்சிவப்பு நிற புகையும் நீர்மமாகக் காணப்படும் டைகுளோரின் எக்சாக்சைடு குளோரைல் பெர்குளோரேட்டு [ClO2]+[ClO4]− என்ற சிவப்பு நிற குளோரைல் பெர்குளோரேட்டாக அயனியாக்கம் அடைகிறது. சிவப்பு நிறம் குளோரைல் அயனிகளின் இருப்புக்கு ஓர் அடையாளம் ஆகும். எனவே இந்தச் சேர்மத்தில் குளோரினின் முறையான ஆக்சிசனேற்ற நிலை குளோரின்(V) மற்றும் குளோரின் (VII) ஆகியவற்றின் கலவையாக வாயு மற்றும் உறைந்த நிலைகளில் உள்ளது; இருப்பினும் ஒரு ஆக்சன்-குளோரின் பிணைப்பை உடைப்பதன் மூலம் சிறிதளவு எலக்ட்ரான் அடர்த்தி குளோரின்(VII) அயனியை நோக்கி மாறுகிறது.
பண்புகள்
டயா காந்தப்பண்பு கொண்ட Cl2O6 சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்ற முகவராகும். அறைவெப்பநிலையில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்ற போதிலும் கரிமச் சேர்மங்களுடன் பட நேர்ந்தால் இது தீவிரமாக வெடிக்கிறது[4]. தங்கத்துடனும் வினையில் ஈடுபட்டு [ClO2]+[Au(ClO4)4]−. என்ற குளோரைல் உப்பைக் கொடுக்கிறது[5]. Cl2O6 பங்குகொள்ளும் கீழ்கண்ட இதர வினைகள்யாவும் [ClO2]+[ClO4]− என்ற கட்டமைப்பை பிரதிபலிக்கின்றன:[6]
↑Lopez, Maria; Juan E. Sicre (1990). "Physicochemical properties of chlorine oxides. 1. Composition, ultraviolet spectrum, and kinetics of the thermolysis of gaseous dichlorine hexoxide". J. Phys. Chem.94 (9): 3860–3863. doi:10.1021/j100372a094.