தங்கராஜ் (நடிகர்)தங்கராஜ் (இறப்பு: சூலை 22, 2013, அகவை 80) தமிழ்த் திரைப்பட நடிகரும், மேடை நாடக நடிகரும் ஆவார். "எம். எல். ஏ. தங்கராஜ்" என்றே இவர் அழைக்கப்பட்டார். பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். வாழ்க்கைச் சுருக்கம்கும்பகோணத்தில் பிறந்தவர் தங்கராஜ். மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர் 1954 ஆம் ஆண்டில் வெளிவந்த மாங்கல்யம் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார். ராஜராஜ சோழன், திசை மாறிய பறவைகள், கருடா சவுக்கியமா?, சுப்ரபாதம் எனப் பல படங்களில் நடித்தார். பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.எல்.ஏ வேடம் ஏற்று நடித்ததை அடுத்து இவரை எம்.எல்.ஏ. தங்கராஜ் என்று அழைத்தனர். மறைவுதங்கராஜ் 2013 சூலை 22 இல் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு சாந்தா என்ற மனைவியும், சுமதி என்ற மகளும் உள்ளனர். சுமதி திரைப்பட, மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகையாவார். வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia