தங்குதன்(IV) குளோரைடு (Tungsten(IV) chloride) என்பது WCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். எதிர்காந்தப்பண்பு கொண்ட கருப்பு நிறத் திண்மமான இச்சேர்மம் ஓர் இரும தங்குதன் குளோரைடாக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
தயாரிப்பு
WCl4 பொதுவாக தங்குதன் அறுகுளோரைடை குறைப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. சிவப்பு பாசுபரசு, தங்குதன் அறுகார்பனைல் , காலியம், வெள்ளீயம் மற்றும் ஆண்டிமனி உள்ளிட்ட பல தனிமங்கள் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. கடைசியாகக் கூறப்பட்டுள்ள ஆண்டிமனி மிகவும் உகந்ததாகக் கூறப்படுகிறது.[1]
கட்டமைப்பு
பெரும்பாலான இரும உலோக ஆலைடுகளைப் போலவே தங்குதன்(IV) குளோரைடும் பல்லுருவத் தோற்றம் கொண்டதாகும். எண்முக வடிவத்தில் ஒவ்வொன்றும் தங்குதன் அணுக்களின் நேரியல் சங்கிலிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு W மையத்திலும் இணைக்கப்பட்டுள்ள ஆறு குளோரைடு ஈந்தணைவிகளில் நான்கு ஈந்தணைவிகள் பாலமமைக்கும் ஈந்தணைவிகளாகும். W-W பிணைப்புகள் ஒன்றையடுத்து ஒன்றென மாறி மாறி பிணைந்துள்ளன. பிணைந்துள்ளவை (2.688 Å) தூரத்திலும் பிணைக்கப்படாதவை 3.787 Å தொலைவிலும் உள்ளன.
↑Zhou, Yibo; Kolesnichenko, Vladimir; Messerle, Louis (2014). "Crystalline and Amorphous Forms of Tungsten Tetrachloride". Inorganic Syntheses: Volume 36. Inorganic Syntheses. Vol. 36. pp. 30–34. doi:10.1002/9781118744994.ch6. ISBN9781118744994.
↑Broderick, Erin M.; Browne, Samuel C.; Johnson, Marc J. A. (2014). Dimolybdenum and Ditungsten Hexa(Alkoxides). Inorganic Syntheses. Vol. 36. pp. 95–102. doi:10.1002/9781118744994.ch18. ISBN9781118744994.