தங்குதன் ஈராக்சைடு
தங்குதன் ஈராக்சைடு (Tungsten dioxide) என்பது WO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்கலம் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இது ஒற்றைச் சரிவில் படிகமாகிறது[1]. உருத்திரிந்த எண்முக WO6 மையங்களுடன் மாற்று குறுகிய W–W பிணைப்புகள் (248 பைகோ மீட்டர்|பை.மீ) அமைந்துள்ள உரூத்தைல் போன்ற அமைப்பு அம்சங்களுடனான அமைப்பை பெற்றுள்ளது.[1] ஒவ்வொரு தங்குதன் மையமும் d2 வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் இச்சேர்மம் உயர் மின்கடத்துகைத் திறன் பெற்றுள்ளது. 900° செல்சியசு வெப்பநிலையில் WO3 சேர்மத்துடன் தங்குதன் பொடியைச் சேர்த்து 40 மணி நேர ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் தங்குதன் ஈராக்சைடைத் தயாரிக்கமுடியும். இவ்வினையில் கலப்பு இணைதிறன் சேர்மமான W18O49 பகுதியாக ஒடுக்கப்படுகிறது.
மாலிப்டினம் வரிசைச் சேர்மமான MoO2 இம்முறையிலேயே தயாரிக்கப்படுகிறது. வேதியியல் போக்குவரத்து நுணுக்கத்தில் அயோடினைப் பயன்படுத்தி ஒற்றைப் படிகங்கள் தயாரிக்கப்படுகின்றன. WO2 சேர்மத்தை அயோடின் ஆவியாகும் வரிசைச் சேர்மமாகச் செலுத்துகிறது[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia