தடியூன்றித் தாண்டுதல்

தடியூன்றித் தாண்டுதல்

தடியூன்றித் தாண்டுதல் (தென்னிலங்கை வழக்கு: கோலூன்றிப் பாய்தல்) (Pole vault) என்பது தட கள விளையாட்டுக்களில் ஒரு போட்டியாகும். இதில் போட்டியாளர் நீளமான நெகிழ்வுடைய கம்பு ஒன்றினைப் பயன்படுத்தி கிடைநிலை சட்டத்தின் மேலாக தாவித் தாண்டுகிறார். தற்காலத்தில், தாவப் பயன்படுத்தும் கம்பு கண்ணாடியிழை அல்லது கரிம இழைகளால் தயாரிக்கப்படுகிறது.[1] தடியூன்றித் தாண்டும் போட்டிகள் கிரேக்கத்தில் நடைபெற்றதாகத் தெரிகிறது. இந்த விளையாட்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 1896 முதல் ஆடவருக்கும் 2000 ஆம் ஆண்டு முதல் மகளிருக்குமான போட்டியாக விளங்குகிறது.

தொடர்புடைய பக்கங்கள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya