தட்றோம் தூக்றோம்
தட்றோம் தூக்றோம் (Thatrom Thookrom) என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும், அருள் எஸ். எழுதி, இயக்கிய இப்படத்தில் டீஜே அருணாசலம், சீனு மோகன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சம்பத் ராம் எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளார்.[1] படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த படம் 14 நவம்பர் 2020 அன்று குறைந்த அளவு திரையரங்குகளில் வெளியானது.[2] நடிகர்கள்
தயாரிப்பும், வணிகமும்படத்தின் ஒளிப்பதிவு 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துவங்கியது. முன்னதாக டீஜே அருணாசலம் இப்படத்தின் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க 2017 இல் ஒப்பந்தமானார். படத்தின் பெரும்பாலான பகுதிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. இந்த படம் துவக்கத்தில் 2016 இந்திய பணத்தாள் மதிப்பிழப்பு நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டதாக ஊகிக்கப்பட்டது,[3] இருப்பினும், படம் இந்த அடிப்படையாக கொண்டது அல்ல என்று இயக்குநர் தெளிவுபடுத்தினார்.[4] இசைஇப்படத்திற்கான இசையை பாலமுரளி பாலு அமைத்தார். முதல் ஒற்றை பாடலான "டிமானிடேசன் ஆன்தம்" 2017 நவம்பரில் வெளியிடப்பட்டது. இது சர்ச்சைகளை உருவாக்கியபோதிலும் வைரலாகியது.[5] நவம்பர் 8, 2016 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் திணிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து இருந்து இந்த பாடல் உந்துதல் பெற்றது [6] கௌரவம்
சர்ச்சைநடிகர் சிலம்பரசன் பாடிய "டிமானிடேசன் ஆன்தம்" என்று அழைக்கப்படும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கருப்பொருளாக கொண்ட பாடல் 2017 நவம்பரில் இந்தியாவில் பண மதிப்பிழப்பின் முதலாம் ஆண்டு நாளின் போது வெளியிடப்பட்டது.[8] எவ்வாறாயினும், இந்த குறிப்பாக பாடல் அதன் பணமதிப்பிழப்பை விமர்சிக்கும் உள்ளடக்கத்தால், அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை எழுப்பியது.[9] நடிகர் சிம்பு பாடலைப் பாடியதற்காக கண்காணிப்பில் இருந்தார், அவருக்கு சிறப்பு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.[10][11] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia