தத்துவராயர்

தத்துவராயர் (Tattuvarayar) என்பவர் கிபி 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர். வடமொழி வேதாந்த நெறிக்குத் தமிழில் இலக்கணம் கண்ட முதல் ஆசிரியர்.[1] இவர் தன் ஆசிரியர் சொரூபானந்தர் உதவியுடன் 18 நூல்களைத் தமிழில் பாடினார். அவற்றை 'அடங்கன்முறை' (அடங்கல் முறை) என குறிப்பிடுகின்றனர்.

அடங்கல்முறை நூல்களை,

  • கூந்தலை உடையவன் வாரி முடிக்கிறான் (தமிழில் வல்லவன் பாடுகிறான்) என்றும்,
  • உலகியல் வாழ்க்கைக்கு உதவாதவை என்றும்

இவரது ஆசிரியர் சொரூபானந்தர் கருதினார்.

நூல்கள்

தத்துவராயர் நூல்கள் என இங்கு 26 நூல்கள் காட்டப்பட்டுள்ளன.
இவற்றில்

  • அடங்கல்முறை என்று குறிப்பிடப்படும் தொகுப்பு நூல்கள் எண் 3 முதல் 20 வரை எண்ணிடப்பட்டுள்ள 18 நூல்கள்
    • ஆசிரியருக்கு அடங்கி நடந்த முறைமையைக் கூறுவதால் பெற்ற பெயர்.
  • எண் 22-ல் குறிப்பிடப்பட்டுள்ள நூல் தத்துவராயர் பயன்படுத்திக்கொண்ட நூல்.

பட்டியல்

எண் நூலின் பெயர் நூலின் மறுபெயர் (உள்ளடக்கப் பெயர்)
1 சிவப்பிரகாச வெண்பா குருவின் குரு சிவப்பிரகாசருக்கு வணக்கம்
2 தத்துவாமிர்தம் குருவைத் தேடியது
3 திருத்தாலாட்டு தத்துவப் பிரகாசம்
4 பிள்ளைத் திருநாமம் (பிள்ளைத்தமிழ்) தத்துவ நிலையம்
5 வெண்பா அந்தாதி தத்துவ விளக்கம்
6 கலித்துறை அந்தாதி தத்துவ சாரம்
7 சின்னப்பூ வெண்பா தத்துவ சரிதை
8 தசாங்கம் தத்துவ போதம்
9 இரட்டைமணி மாலை தத்துவ தீபம்
10 மும்மணிக்கோவை தத்துவ ரூபம்
11 நான்மணி மாலை தத்துவ அனுபவம்
12 கலிப்பா தத்துவ சித்தி
13 ஞானவினோதன் கலம்பகம் தத்துவ ஞானம்
14 உலா தத்துவ காமியம்
15 சிலேடை உலா தத்துவ வாக்கியம்
16 நெஞ்சுவிடு தூது தத்துவ நிச்சயம்
17 கலிமடல் தத்துவத் துணிவு
18 அஞ்ஞவதைப் பரணி தத்துவக் காட்சி
19 மோகவதைப் பரணி இதன் மறுபெயர் ஏடுகளில் விடுபட்டுள்ளது
20 அமிர்த சாரம் தத்துவ தரிசனம்
21 பாடுதுறை (தத்துவராயர், சொரூபானந்தர் பிரிந்து கூடுதல்
22 ஈசுர கீதை சிவப்பிரகாசர் சித்தி (வடமொழிநூல் தமிழில் மொழிபெயர்ப்பு)
23 பிரம கீதை சொரூபானந்தர் சித்தி
24 சசிவன்ன போதம் மோகவதைப் பரணி நூலின் தனிப்பகுதி
25 பெருந்திரட்டு சிவப்பிரகாசம், (சிவப்பிரகாசர் திரட்டியது)
26 குறுந்திரட்டு சிவப்பிரகாசத்திலிருந்து தத்துவராயர் திரட்டியது

இவர் வேதாந்தி. தம் வேதாந்தக் கொள்கைகளை நிறுவுவதற்காகத் தேவாரப்பாடல்களைத் தன் கோணத்திற்கேற்பத் திரட்டி வெளியிட்டார். அவரது தேவாரத் திரட்டு இரண்டு நூல்களாக உள்ளன.

என்பன அவை.

இவற்றையும் காண்க

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1959) திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. பிரமம் என்பது வேதத்தின் மூலப் பொருள். இந்த வேதக் கொள்கைகளைப் பாட வந்த தத்துவராயர் தன்னை அறியாமல் தன் சூழல் தாக்கத்தால் சைவ, வைணவச் செய்திகளை அரவணைத்துக் கொள்கிறார்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya