தந்தமூக்குத் திமிங்கிலம்
தந்தமூக்குத் திமிங்கிலம் அல்லது நார்வேல் என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கூரிய பற்கள் கொண்ட பல்திமிங்கிலம் ஆகும். இதன் நீடித்த ஒரு கோரைப்பல்லானது யானையின் தந்தம் போன்று முன்புறம் நீண்டு காணப்படுகிறது. கிரீன்லாந்து, கனடா மற்றும் உருசியாவைச் சுற்றியுள்ள ஆர்க்டிக் நீரில் ஆண்டு முழுவதும் வாழ்கிறது. வெள்ளைத் திமிங்கலத்துடன் சேர்த்து மோனோடோன்டிடே குடும்பத்தில் உள்ள திமிங்கலத்தின் இரண்டு இனங்களில் இதுவும் ஒன்றாகும். நார்வால் திமிலங்களில் ஆண் திமிங்கிலங்கள், நீளமான மேல் இடது கோரைப்பல்லிலிருந்து நேராக நீண்ட தந்தப் பல் மூலம் பெண் திமிங்கிலங்களை வேறுபடுத்துகின்றன. 1758 இல் சிஸ்டமா நேச்சுரே என்ற தனது வெளியீட்டில் காரோலஸ் லின்னேயஸ் விவரித்த பல உயிரினங்களில் நார்வால் திமிங்கிலமும் ஒன்றாகும் . வெள்ளைத் திமிங்கிலத்தைப் போல் நார்வால் திமிங்கிலமும் நடுத்தர அளவுடைய திமிங்கிலமாக உள்ளன. இரு பாலினட்துக்கும், ஆணின் தந்தத்தைத் தவிர, மொத்த உடல் அளவு 3.95 முதல் 5.5 m (13 முதல் 18 அடி) ஆகும். ஆண் திமிங்கிலம் பெண் திமிங்கிலத்தை விட மிகச் சற்றே பெரியது. நன்கு வளர்ச்சியடைந்த ஒரு நர்வாலின் சராசரி எடை 800 முதல் 1,600 kg (1,760 முதல் 3,530 lb) . சுமார் 11 முதல் 13 வயதில், ஆண் திமிங்கிலம் பாலியல் முதிர்ச்சியடைகிறது. பெண் திமிங்கிலம் சுமார் 5 முதல் 8 வயதில் பாலியல் முதிர்ச்சியடைகிறது. . நார்வால்களுக்கு முதுகுத் துடுப்பு இல்லை. மேலும் அதன் கழுத்து முள்ளந்தண்டு வடம் மற்ற பாலூட்டிகளைப் போலவே இணைக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஓங்கில்கள் மற்றும் பெரும்பாலான திமிங்கலங்களில் உள்ளது போல இணைக்கப்படவில்லை. பெரும்பாலும் கனேடிய ஆர்க்டிக் மற்றும் கிரீன்லாந்திக் மற்றும் ரஷ்ய நீரில் காணப்படும் இந்த நர்வால் ஒரு தனித்துவமான ஆர்க்டிக் வேட்டையாடி ஆகும். குளிர்காலத்தில், இது அடர்த்தியான பேக் பனியின் கீழ் பெந்திக் எனப்படும் கடல் வாழ் இரையை, பெரும்பாலும் தட்டை மீன்களை வேட்டையாடி உண்கிறது. கோடையில், நார்வால்கள் பெரும்பாலும் ஆர்க்டிக் கோட் மற்றும் கிரீன்லாந்து ஹாலிபட் ஆகியவற்றை சாப்பிடுகின்றன, துருவக் கோட் போன்ற பிற மீன்களும் அவற்றின் உணவின் எஞ்சிய பகுதியை உருவாக்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும், கோடை காலம் வருவதால் அவை விரிகுடாக்களிலிருந்து கடலுக்குள் குடியேறுகின்றன. குளிர்காலத்தில், ஆண் நர்வால்கள் எப்போதாவது 1,500 m (4,920 அடி) வரை முழுக்குகின்றன. ஆழத்தில் மூழ்கி 25 நிமிடங்கள் வரை நீடிக்கும். நர்வால்கள் பெரும்பாலான பல் திமிங்கலங்களைப் போலவே, " க்ளிக்" செய்தல், "ஊதுதல்" மற்றும் "தட்டுதல் " ஆகியவற்றின் மூலம் செய்தித் தொடர்பு கொள்கின்றன. நர்வால்கள் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம். ஆர்டிக் மற்ரு துருவப்பகுதிகளில் கடல் பனி உருவாவதால் அவற்றில் நார்வால்கள் சிக்கிய பின்னர் பெரும்பாலும் மூச்சுத் திணறலால் கொல்லப்படுகின்றன. மஓர்க்கா திமிங்கலங்களின் பட்டினி மற்றும் வேட்டையாடுதல் காரணமாக குறிப்பாக நார்வாலின் இளந்திமிங்கிலங்களின் மரணத்திற்குக் காரணமாகின்றன. உலக நர்வால் எண்ணிக்கையில் முந்தைய மதிப்பீடுகள் 50,000 க்கும் குறைவாக இருந்ததால, இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் (ஐ.யூ.சி.என்) நார்வால்களை கிட்டத்தட்ட அச்சுறுத்தல் இனமாக வகைப்படுத்தியுள்ளது. மிக அண்மைய மதிப்பீடுகள் அதிக நார்வால் எண்ணிக்கையைப் பட்டியலிடுகின்றன (170,000 க்கு மேல்), இதனால் இவற்றின் நிலை பெஉம் அழிவாய்ப்பு நிலையிலிருந்து குறைந்த அழிவாய்ப்புள்ள இனமாகக் குறைக்கிறது.[2] வடக்கு கனடா மற்றும் கிரீன்லாந்தில் உள்ள இன்யூட் மக்களால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நார்வால்கள் இறைச்சி மற்றும் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன, மேலும் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வாதார வேட்டை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia