தனியன் (வைணவம்)தனியன் என்பது வைணவ நூல்களில் காணப்படும் குறியீடு. ஆழ்வார் அல்லது வைணவப் பெரியார் ஒருவரின் பாடல்களைக் கூறும் முன்னர் அவரைப் போற்றித் துதிக்கும் பாடல். தனிமனிதனைப் போற்றும் பாடல் ஆனதால் இப்பாடல் தனியன் எனப்பட்டது என்பது ஒரு பொருள். தனித்து நிற்கும் ஓரிரு பாடலாக இருப்பதால் தனியன் எனப்பட்டது என்பது மற்றொரு பொருள். தமிழில் வரும் தனியன்கள் வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைவது வழக்கம். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் பெரியாழ்வாரைப் போற்றும் தனியன்களாக மூன்று பாடல்கள் உள்ளன. அவற்றில் முதல் தனியன் வடமொழியில் நாதமுனிகள் செய்தது. [1] அடுத்த இரண்டு தனியன்கள் பாண்டியபட்டர் என்பரால் பாடப்பட்டவை.[2] அதே போல ஆண்டாள் திருப்பாவை தொடங்குவதற்கு முன்னர் பட்டர் அருளிய வடமொழித் தனியன் ஒன்றும், உய்யக்கொண்டார் அருளிய தனியன்கள் இரண்டும் உள்ளன.[3] இப்படிப் பிற ஆழ்வார்களின் பாடல்களுக்கும் தனியன் பாடல்கள் உண்டு. தனியன் பாடல்கள் 10 ஆம் நூற்றாண்டில் பாடி இணைக்கப்பட்டவை. மேலும் காண்கஅடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia