தபாகத்-இ நசீரி

தபாகத்-இ நசீரி என்பது ஒரு வரலாற்று நூல் ஆகும். இதை மின்ஹஜ்-இ சிராஜ் ஜுஸ்ஜனி என்பவர் 1260ஆம் ஆண்டு பாரசீக மொழியில் எழுதி முடித்தார். இவர் ஆப்கானித்தானின் கோர் நகரத்தில் பிறந்து தில்லியில் வாழ்ந்தார். இவர் இந்நூலை சம்சுத்தீன் இல்த்துத்மிசின் மகனான தில்லி அடிமை வம்சச் சுல்தான் நசீருத்தீன் மகமுது ஷாவிற்காக எழுதினார். இந்நூல் மொத்தம் 23 பாகங்களைக் கொண்டுள்ளது. இந்நூலின் 23ஆம் பாகம் செங்கிஸ் கான் குவாரசமியாவைத் தாக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறது. செங்கிஸ் கானின் உடல் தோற்றத்தை நேரில் கண்டதாகக் கூறி எழுதிய இரண்டு வரலாற்றாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். அரசமரபுகளின் வரலாறுகளை எழுத இவர் இந்நூலில் பயன்படுத்திய எழுதும் முறை பின்வந்த நூற்றாண்டுகளில் பின்பற்றப்பட்டது. இந்நூலை எச். ஜி. ராவெர்ட்டி என்பவர் ஆங்கில மொழிக்கு 1873ஆம் ஆண்டு "ஆசியாவின் முகமதிய வம்சங்களின் பொதுவான வரலாறு" என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.[1]

பாகம் 23

முகலாயன் சிங்கிஸ் கானின் எதிர்பாராத கிளர்ச்சி

குவாரசமிய ஷா அலாவுதீனுக்கு சின் அரசமரபை வெல்லும் ஆசை இருந்தது. அடிக்கடி அந்நாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்து வருபவர்களிடமும் அடிக்கடி அந்நாட்டின் எல்லைகளைப் பற்றி விசாரித்தார். அந்நாட்டைப் பற்றி அறிய அவர் சயித் மற்றும் பகாவுதீன் என்ற இருவரை அனுப்பி வைத்தார். சயித் மற்றும் பகாவுதீன் பின்வருமாறு கூறினர், "நாங்கள் தம்கச்சின் எல்லைகளுக்குள் வந்தபோது, தங்கக் கானின் அரசின் அமைவிடத்திற்கு அருகில் குறிப்பிடத்தக்க அளவு தூரத்தில் ஒரு உயரமான வெள்ளை மேடானது கண்களுக்குத் தெரிந்தது. அது இருந்த இடத்திற்குத் தூரம் அதிகமாக இருந்தது. எங்களுக்கும் அந்த உயரமான குன்றுக்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று பங்கு தூரம் அல்லது அதற்கு அதிகமாகவும் இருக்கலாம். குவாரசமிய ஷாவின் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட நாங்கள், அந்த வெள்ளை மேடானது ஒரு பனிக் குன்றாக இருக்கலாம் என்று கருதினோம். எங்களுடன் வந்த வழிகாட்டியிடம் அதைப் பற்றி கேட்டோம். அங்கு இருந்த மக்கள் பின்வருமாறு பதில் கூறினர், "அந்த மேடானது முழுவதுமாக, கொல்லப்பட்ட மனிதர்களின் எலும்புகளால் ஆனது" என்றனர். நாங்கள் ஒரு பங்கு தூரத்தை கடந்தபோது, நிலமானது வளவளப்பாக மனிதக் கொழுப்பால் கருப்பு நிறத்தில் இருந்தது. இன்னும் மூன்று பங்கு தூரத்திற்கு அதே சாலையில் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. அதற்குப் பிறகே மீண்டும் சாதாரண தரை தென்பட்டது. தரையில் மிதித்ததன் காரணமாக, எங்களது குழுவில் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிலர் இறந்தனர்.

நாங்கள் திரும்பியபோது, சிங்கிஸ் கான் ஏராளமான அரிய பொருட்கள் மற்றும் பரிசுகளை சுல்தான் முகமது குவாரசமிய ஷாவிடம் கொடுக்குமாறு கொடுத்தனுப்பினார். குவாரசமிய ஷாவிடம் கூறுங்கள்,

நான் சூரியன் உதிக்கும் நாட்டின் மன்னன். நீங்கள் சூரியன் மறையும் நாட்டின் மன்னன். நமக்கு இடையில் உறுதியான நட்புறவு மற்றும் அமைதி உருவாகட்டும். வணிகர்களும், வணிக வண்டிகளும் நமது இரு நாடுகளுக்கிடையிலும் வந்து செல்லட்டும். எனது நாட்டிலுள்ள விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் சரக்குப் பொருட்கள் உங்கள் நாட்டுக்கு வரட்டும். அதே போல் உங்கள் நாட்டில் உள்ள பொருட்களும் என்னுடைய நாட்டிற்கு வரட்டும்.

சிங்கிஸ் கான்

சிங்கிஸ் கான், சுல்தான் முகமது குவாரசமிய ஷாவிற்கு அனுப்பிய விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்களில், ஒட்டகத்தின் கழுத்து அளவிற்கு பெரியதாக இருந்த சுத்தப் பொற்கட்டி. இதை அவர்கள் சிங்கிஸ் கானுக்குத் தம்கச்சின் மலைப்பகுதியிலிருந்து கொண்டு வந்து கொடுத்திருந்தனர். இதன் காரணமாக அந்தப் பொற்கட்டியை ஒரு வண்டியில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் எங்களுடன் சிங்கிஸ் கான் 500 ஒட்டகங்களில் பொன், வெள்ளி, பட்டு, மற்றும் சின் மற்றும் தம்கச்சில் இருந்த அழகான பொருட்கள், மற்றும் அவரது வணிகர்களை அனுப்பி வைத்தார். இதில் பெரும்பாலான ஒட்டகங்கள் தங்கம் மற்றும் வெள்ளியைச் சுமந்து வந்தன. இந்தக் குழுவானது உற்றார் நகரை அடைந்த பொழுது, உற்றார் நகரின் கதிர் கான்  நம்பிக்கையற்ற முறையில் நடந்து கொண்டார். பெருமளவிலான தங்கம் மற்றும் வெள்ளி மீது தனக்கு ஏற்பட்ட தகாத பேராசை காரணமாக சுல்தான் முகமது குவாரசமிய ஷாவிடம் அனுமதி பெற்று அந்த மொத்த வணிகர்கள், பயணிகள் மற்றும் சிங்கிஸ் கானின் தூதுவர்களைக் கொன்றார். இவ்வாறாக அவர்களில் ஒருவர் கூட தப்பவில்லை. ஒரே ஒரு ஒட்டகக் காரன் மட்டும் குளித்துக்கொண்டிருந்தான். இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்த புகை போக்கி வழியாக ஏறித் தப்பித்தான். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பிறகு பாலைவனம் வழியாக சின் மற்றும் தம்கச் பகுதிகளுக்குத் திரும்பி வந்தான்.

இந்த ஏமாற்று வேலையின் தகவல்களை அவன் சிங்கிஸ் கானிடம் தெரிவித்த போது குவாரசமியப் பேரரசின் அழிவு உறுதி என்று கடவுள் தீர்மானித்தார். சிங்கிஸ் கானின் வணிகர்களுடைய தங்கம் அல்லது வெள்ளியில் சிறிதளவு வைத்திருந்த கருவூலங்களும் கூட அத்தைகைய ஒட்டு மொத்த கருவூலம், அப்பகுதியின் இறையாண்மை மற்றும் நாடுடன் சிங்கிஸ் கான் மற்றும் முகலாயப் படைகளிடம் வீழ்ந்தது.

குவாரசமியாவில் நடைபெற்ற நிகழ்வுகளின் வரலாறு

தப்பியோடியவன் [ஒட்டகக் காரன்] சிங்கிஸ் கானின் வணிகர்கள் மற்றும் தூதர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவரிடம் கூறிய போது துருக்கிசுத்தான், சின், மற்றும் தம்கச்சில் இருந்த தனது படைகளை ஒன்றிணையுமாறு சிங்கிஸ் கான் ஆணையிட்டார். ஆறு இலட்சம் குதிரைப் படையினர் ஒன்றிணைக்கப்பட்டனர். ஆறு இலட்சம் குதிரைகள் பகதூர்களுக்கு வழங்கப்பட்டன: இவர்கள் ஒரு போர் வீரனை பகதூர் என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு பத்து குதிரை வீரனுக்கும் மூன்று துக்லி (ஆறு மாதமான/பாதி வளர்ந்த) ஆட்டுக் குட்டிகள் கொடுக்கப்பட்டன. அவற்றின் மாமிசத்தை காய வைத்து பதப்படுத்தவும் அவர்களுக்கு ஆணையிடப்பட்டது. இவர்கள் தங்களுடன் ஓர் இரும்பு அண்டா மற்றும் நீரை வைத்துக் கொள்ள ஒரு தோல் பை ஆகிவற்றையும் எடுத்துக் கொண்டனர். இவ்வகையில் படையானது நகர ஆரம்பித்தது.

சிங்கிஸ் கானின் நிலப்பரப்பின் எல்லையில் அந்நேரத்தில் முகலாயர்கள் இருந்த இடத்தில் இருந்து உற்றாருக்கு மூன்று மாத அணி வகுப்பு தொலைவு இருந்தது. இது முழுவதும் விவசாயமற்ற காட்டுப் பகுதியாக இருந்தது. மூன்று மாத காலத்தில் இந்த அணி வகுப்பை நடத்தவும், இத்தகைய சொற்ப அளவு உணவை வைத்து உயிர் பிழைத்திருக்கவும், குமிஸ் மற்றும் இவர்களது குதிரைகளின் பாலை சிறிது சிறிதாகப் பயன்படுத்தவும் இவர்களுக்கு ஆணையிடப்பட்டது. தங்களுக்கு முன்னால் குதிரைக் கூட்டத்தை வைத்து இவர்கள் வந்தனர். இக்குதிரைகளின் என்ணிக்கை எண்ண முடியாத அளவுக்கு ஏராளமாக இருந்தது. பிறகு இவர்கள் குவாரசமிய நிலத்தை நோக்கித் தங்களது முகத்தைத் திருப்பினர். 1220ஆம் ஆண்டின் முடிவில் வன்முறை ஆரம்பித்த உற்றாரின் எல்லையில் இவர்கள் வெளிப்பட்டுத் தோன்றினர். தங்களது பயணத்தால் சோர்வுற்று, கதியற்று இருந்த போதும் சில மாதங்களிலேயே உற்றாரைக் கைப்பற்றும் அளவுக்கு சிங்கிஸ் கான் மற்றூம் முகலாய இராணுவத்தின் இயல்பில் கடவுள் ஆற்றல், நம்பிக்கை, மற்றும் பயமற்ற பண்பை பொத்தித்து வைத்திருந்தார். உற்றார் மக்கள் அனைவரும் வாளால் கொல்லப்படனர். பிறகு அங்கிருந்து புகாராவை நோக்கி அணி வகுத்தனர்.

அந்நகரத்தின் முன் முகாமிட்டனர். அந்நகரத்தில் 12,000 குதிரைப் படை வீரர்கள் குவாரசமியா பக்கம் இருந்தனர். முகலாயர்கள் முற்றுகையிட ஆரம்பித்தனர். இரு வாரங்களுக்கு உள்ளாகவே இவர்கள் புகாராவைக் கைப்பற்றினர். ஒட்டு மொத்த நகரத்தையும், நூலகங்களையும் எரித்தனர். பிறகு சமர்கந்தை நோக்கித் தங்களது முகத்தைத் திருப்பினர். இயற்கையான பகுதியில் இருந்து வந்து உற்றாரையும், புகாராவையும் கைப்பற்றிய சிங்கிஸ் கானின் இராணுவத்தின் முன் வரிசைப் படைக்குத் தலைமை தாங்கியவன் தமுர்ச்சி என்ற ஒரு துருக்கியன் ஆவான். இவன் பெரும் ஆற்றலைக் கொண்டிருந்தான். இவன் சிங்கிஸ் கானின் குடும்பத்துக்கு சேவையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஓர் அதிகாரி ஆவான்.

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya