தப்ரீசு
தப்ரிசு (Tabriz, அசர்பைஜான்: تبریز, Təbriz, Persian: تبریز), என்பது ஈரானின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும்.[3] இது ஈரானின் வரலாற்று தலைநகரங்களில் ஒன்ரககவிலன்குகிறது. மற்றும் கிழக்கு அசெர்பையான் மாகணத்தின் தலைநகரமும் ஆகும். தப்ரிசு கடல் மட்டத்திலிருந்து 1,350 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. தப்ரிசுவின் மக்கள் தொகை 1.73 மில்லியன் அதிகம் (2016).[4] ஆகும். வடமேற்கு ஈரானில் மிகப்பெரிய பொருளாதார மையமாகவும் பெருநகரமாகவும் தப்ரிஸ் திகழ்கிறது. பாரசீக மக்கள் இரண்டாம் மொழியாக பேசினாலும், இதன் மக்கள் தொகையில் அதிகமானோர் அசர்பைஜான் மொழிபேசுகின்ற மக்களாவர்.[5] இது இயந்திர கருவிகள், சுத்திகரிப்பு, ஜவுளி மற்றும் சிமெண்ட் உற்பத்தி போன்ற கைத்தொழில்களின் மையமாக விளங்குகின்றது.[6] கையால் நெய்யப்பட்ட விரிப்புகள், நகைகள் உள்ளிட்ட கைவினைப்பொருட்களுக்கு இந்த நகரம் புகழ் வாய்ந்தது ஆகும். உள்ளூர் மிட்டாய், சாக்லேட், உலர்ந்த கொட்டைகள், பாரம்பரிய தப்ரிஸி உணவு ஆகியவை ஈரான் முழுவதும் சிறந்தவை என்று பெயர் எடுத்துள்ளன. தப்ரிசு நகரமானது, ஒரு கல்விக் கூடங்களின் நடுவமாக உள்ளது. வடமேற்கு ஈரானில் உள்ள மிகவும் மதிப்புமிக்க கலாச்சார நிறுவனங்களுக்கான தளமாகவும் உள்ளது. தப்ரிஸில் பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் உள்ளன. இது ஈரானின் கட்டடக்கலை மாற்றத்தை அதன் ஆழமான வரலாறு முழுவதுமாகத் தெரிவிக்கிறது. தப்ரிஸின் பாதுகாக்கப்பட்ட வரலாற்று தளங்களில் பெரும்பாலானவை, இல்கானிட், சஃபாவிட் வம்சம், கஜார் வம்சம் ஆகியவற்றைச் சேர்ந்தவைகள் ஆகும்.[7][8] இந்த தளங்களில் கிராண்ட் தப்ரிஸின் பஜார் என்பது உள்ளது. இது உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப் பட்டுள்ளது.[9][10] சுற்றுச்சூழல் மாசுபாடுதப்ரிஸில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்று காற்று மாசுபாடு ஆகும். இந்த நகரத்தில் பயணத்தில் ஏராளமான கார்கள் அதிகரித்து வருவதாலும், நகரத்தின் மேற்கில் உள்ள வெப்ப மின் உற்பத்தி நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் வளாகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற மாசுபடுத்தும் தொழில்களாலும், காற்று மிகவும் மாசுபாடு ஏற்படுகிறது. காற்று மாசுபாட்டின் அளவு, 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், தொடர்ந்து அதிகரித்துள்ளது. கனரக தொழில்களால் தேசிய சுற்றுச்சூழல் குறியீடுகளின் கட்டளையுடன், சமீபத்திய ஆண்டுகளில் தொழில்துறை காற்று மாசுபாடு குறைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நகரத்தில் காற்றின் தரம், தூய்மையான காற்றுக்கான உலக விதிமுறைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. மேற்கு டேப்ரிஸின் புறநகரில் அமைந்துள்ள உர்மியா ஏரி சுருங்குதல் மற்றும் உலர்த்துவது உடனடி சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் ஆகும். இந்த ஏரி 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு உள்ளது. நீர் ஆழம் குறைப்பு, நீரின் உப்புத்தன்மையை செறிவு நிலைக்கு அதிகரிப்பதும், ஏரியைச் சுற்றியுள்ள பரந்த உப்பு வயல்களின் தோற்றம் ஆகியவை, ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பில், படிப்படியாக மொத்தமாக வறண்டு போவதற்கான, ஆபத்தான அறிகுறிகளாகும். புவி வெப்பமடைதல், படுகையில் போதுமான நன்னீர் ஆதாரங்களுக்கான கோரிக்கைகளும், தேவைகளும் அதிகரித்து வருவதால் இது நிகழ்ந்தது. இது எதிர்காலத்தில் தாழ்வான மேகங்களான வான்வழி உப்பையும், தாதுக்கள் ஏரியைச் சுற்றியுள்ள, பெரிய பகுதிகளில் சுற்றிக் கொண்டு, கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.[11] மதம்1501 இல் தப்ரிஸில் முடிசூட்டப்பட்ட பிறகு, இஸ்மாயில் I என்ற முதன்மைப் பெயரைக் கொண்ட ஷா இஸ்மாயில் I சியா இசுலாமின் ட்வெல்வர் கிளையை, சஃபாவிட் பேரரசின் அதிகாரப்பூர்வ மதமாக அறிவித்தார். இந்த அரச ஒழுங்கின் விளைவாக, தப்ரிஸின் அதிக சுன்னி மக்கள் ஷியாவுக்கு மாறினர்.[12] தற்போது, பெரும்பான்மையான மக்கள் ஷியா இஸ்லாத்தை பின்பற்றுபவர்களே ஆவர். கிறிஸ்தவத்தை பின்பற்றும் ஆர்மீனிய அப்போஸ்தலிக் சர்ச் அடிப்பையிலான ஆர்மீனிய அப்போஸ்தலிக் சிறுபான்மையினரும், இந்த நகரத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிறிய யூத சமூகம் இருந்தது. ஆனால், அவர்களில் பெரும்பாலோர் தெகுரான் நகருக்குச் சென்றுவிட்டனர். குர்திஷ் நாட்டுப்புற மதமான யாரிசன் என்ற யர்சனிசத்தைப் பின்பற்றுபவர்களும், இந்த நகரத்தில் வாழ்கின்றனர். ஒரு சிறிய, சிக்கலான, பஹாய் நகரத்தில் சமூகமும் உள்ளது.[13] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia