தமிழ்நாட்டு துணை முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழக துணை முதலமைச்சர், ஒரு கட்டாயமற்ற மற்றும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அடுத்த நிலையில் உள்ள பதவியாக மே 29, 2009 அன்று உருவாக்கப்பட்டது. தற்போதைய துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். தமிழக துணை முதலமைச்சர் பதவியை வகித்த முதல் நபர் மு. க. ஸ்டாலின் ஆவார். இவர் மே 29, 2009 அன்று முதல் மே 15, 2011 அன்று வரை பதவி வகித்தார். அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்தவர், அவரது தந்தை மற்றும் முன்னாள் தி.மு.க தலைவர் மு. கருணாநிதி ஆவார். அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி, 2009இல் முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார், அது முதல் அவருக்கு சக்கர நாற்காலி தரப்பட்டது. அவரது உடல்நிலை காரணமாக அவரது துறைகளில் இருந்து பல துறைகளில் கவனம் செலுத்த முடியவில்லை, எனவே அவரது மகனான மு. க. ஸ்டாலின் மீது சில துறைகள் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்தார், அவர் அமைச்சரவையில் உள்ளூர் நிர்வாக அமைச்சராக பதவி வகித்தார். இதன் விளைவாக தமிழ்நாட்டில் முதல் முறையாக துணை முதலமைச்சர் பதவி உருவானது. ஆனால் மு. கருணாநிதி உள்துறைப் பொறுப்பை மட்டும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டார்.[1] 21 ஆகத்து 2017 அன்று, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கீழ் கிளர்ச்சிப் பிரிவும், இன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமியின் கீழ் கிளர்ச்சிப் பிரிவும் ஒன்றில் ஒன்றிணைக்க முடிவு செய்தன. இதன் விளைவாக ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்தின் இரண்டாவது துணை முதலமைச்சராக பதவியேற்று 21 ஆகத்து 2017 முதல் 2021 மே 6 வரை பதவியில் இருந்தார்.[2] தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக 28 செப்டம்பர் 2024 முதல் உதயநிதி ஸ்டாலின் பதவி வகித்து வருகிறார். பட்டியல்
புள்ளிவிவரம்
கட்சி வாரியாக துணை முதலமைச்சர்களின் எண்ணிக்கைகட்சி வாரியாக பட்டியல்:
வாழ்கின்ற முன்னாள் துணை முதலமைச்சர்கள்28 மே 2025, தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வர்கள் இருவர் வாழுகின்றனர்.
பதிவுகள்
இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia