தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்தஅரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.[2][3]
சென்னை பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆளுமை எல்லைகளாக தொடங்கிய சென்னை மாகாணம் ஆங்கில-பிரென்சு (Anglo-French) யுத்தத்திற்கு பிறகு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஆற்காட் நவாப் உடன்படிக்கைக்கு பின்னர் வடக்கு சர்க்கார் தொடங்கி குமரி முனை வரை விரிந்து பரவியது. 1670-ல் பொதுத்துறையில் ஒரு செயலருடன் தொடங்கிய தலைமைச்செயலகம்[4] 1920 ஆம் ஆண்டில் ஆறு துறைகளும் அதனை மேற்பார்வையிட ஒரு தலைமைச் செயலாளரும் கொண்ட கட்டமைப்பாக உருப்பெற்றது. இந்திய அரசு சட்டம், 1919 இயற்றப்பட்டபின் இங்கு 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவை யின் ஆட்சிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தது. 132 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
இந்திய அரசு சட்டம், 1935இன்படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும் 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் முதல் சட்டப் பேரவை பதவியேற்றது. சட்ட மேலவை (Legislative council)[5], எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மூன்றாண்டு காலத்தில் ஓய்வு பெரும்படியான ஒரு நிரந்தர அமைப்பு.
1939-ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா மாகாண அரசாங்கங்களை கலந்து பேசாமலே இரண்டாம் உலகப்போரில் இந்தியா பங்கேற்கும் என பிரகடணம் செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து தன் கட்சியின் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்தவர்களையும் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகக் கோரியது.[6]1946-ல் பின்னர் நடந்த மாகாண தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.[7]
1953ல் சென்னை மாநிலம் (மஞ்சள் நிறம்); இதற்கு முன் ஆந்திரா மாநிலத்தையும் உள்ளடிக்கி இருந்தது (நீல நிறம்)
சென்னை மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-இல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ் நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952-ம் ஆண்டுஜனவரிமாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச்சு 1, 1952-ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது.[12] சென்னை மாநிலம் பிற்பாடு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மாறியமைப்புச் சட்டம், 1956-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின் கேரள மாநிலமும், மைசூர் மாநிலமும் சென்னை மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் ஆந்திர சென்னை மாநிலங்கள் எல்லை மாற்றச் சட்டம், 1959ன் கீழ் ஏப்ரல் 1, 1960 முதல் திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் வட்டத்தின் துணைவட்டமான பள்ளிப்பட்டு ஆகியவை சென்னை மாநிலத்தோடும், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள் ஆந்திர மாநிலத்தினோடும் இணைக்கப்பட்டன.[4]
சென்னை மாகாணம்14 ஜனவரி1969 அன்று தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[13] தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் "தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம், 1986" (Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986) எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர்1986 முதல் அமல்படுத்தப்படுமாறு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது. தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது.[5]
முதலமைச்சரின் பதவிக்காலம் சட்டப்பேரவையின் நம்பிக்கை அவர் மீது உள்ளவரை நீளும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் முதல்வராக இருப்பவர் பதவி விலகவேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைக்கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம்356 பிரிவில் (Article 356) குறிப்பிட்டுள்ள ஒர் தகவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு உண்டு. 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.[14] முதலமைச்சராக உள்ள ஒருவர் இறப்பதாலோ, பதவி விலகுவதாலோ அல்லது பதவி நீக்கம்செய்யப்பட்டாலோ உருவாகும் காலியிடத்திற்கு, மாநில ஆளுனர் மற்றொருவரை அமைச்சரவை அமைக்க அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளலாம். எவரொருவருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவை கலைக்கப்படும் அல்லது ஆளுனர் ஆட்சி அமைக்கப்படும் அல்லது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெரும்வரை இடைக்கால பொறுப்பாட்சி அமையும் நிலை எற்படும்.
↑ 1.01.11.2இந்த பத்தியில் முதல்வரின் கட்சி பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. மாநில அரசு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் கூட்டணியாக இருக்கலாம்; இவை இங்கே பட்டியலிடப்படவில்லை.
↑ 2.02.12.2தொடர்புடைய காலத்தில் குறிப்பிடப்பட்ட நபரின் ஆட்சி வரிசை எண்
↑தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், அமைச்சரவை மீது ஆளுநரின் அதிகாரம் பிடிக்காததால், ஆட்சி அமைக்க மறுத்தது. மெட்ராஸ் கவர்னர் எர்ஸ்கின் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் அல்லாத மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்டு ஒரு இடைக்கால தற்காலிக அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்தார். சீனிவாச சாஸ்திரிக்கு முதலில் இடைக்கால அரசாங்கத்தின் முதலமைச்சர் பதவியை வழங்கினார் ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார். இறுதியில் 1 ஏப்ரல் 1937 இல் குர்மா வெங்கட ரெட்டி நாயுடுவின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. அது சூலை வரை நீடித்தது. பிறகு காங்கிரஸ் வைஸ்ராய் லின்லித்கோ உறுதிமொழியை ஏற்று ஆட்சி அமைக்க முடிவு செய்தது
↑பிரித்தானியாவின் இந்தியாவின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள காங்கிரஸ் அமைச்சகங்கள் 1939 அக்டோபர் 29 அன்று ஜெர்மனிக்கு எதிரான வைஸ்ராயின் போர் அறிவிப்பை எதிர்த்து இராஜினாமா செய்தன. அடுத்த தேர்தல்கள் மார்ச் 1946 இல் நடைபெறும் வரை சென்னை மாகாணம் "ஆளுநரின் நேரடி ஆட்சியின்" கீழ் இருந்தது.(India (Failure of Constitutional Machinery) HC Deb 16 April 1946 vol 421 cc2586-92)
↑ 16.016.1On 21 September 2001, a five-judge constitutional bench of the Supreme Court of India ruled in a unanimous verdict that "a person who is convicted for a criminal offence and sentenced to imprisonment for a period of not less than two years cannot be appointed the Chief Minister of a State under Article 164 (1) read with (4) and cannot continue to function as such". Thereby, the bench decided that "in the appointment of Ms. Jayalalithaa as chief minister there has been a clear infringement of a constitutional provision and that a writ of quo warranto must issue". In effect her appointment as chief minister was declared null and invalid with retrospective effect. Therefore, technically, she was not the chief minister in the period between 14 May 2001 and 21 September 2001 (The Hindu — SC unseats Jayalalithaa as CMபரணிடப்பட்டது 28 நவம்பர் 2004 at the வந்தவழி இயந்திரம், Full text of the judgment from official Supreme Court siteபரணிடப்பட்டது 27 சூன் 2006 at the வந்தவழி இயந்திரம்).