தமிழ் ஆவண மாநாடு

தமிழ் ஆவண மாநாடு என்பது 2013 ஏப்ரல் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள ஆவணவியல், ஆவணகவியல், நூலகவியல், கல்வியியல் துறைகளை முதன்மைப்படுத்திய ஒரு மாநாடு ஆகும். இதனை நூலக நிறுவனம் ஒழுங்கு செய்கிறது. இந்த மாநாட்டின் தொனிப்பொருள் "ஈழத்துத் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்" ஆகும்.

மாநாட்டின் விடயப் பரப்புகள்

பின்வரும் விடயப் பரப்புகள் தொடர்பாக மாநாட்டுக்காக ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டு இருந்தன.[1]

  1. வரலாறு, தொல்லியல் ஆவணங்களும் மரபறிவுப் பதிவுகளும்
  2. ஒலி, ஓளி, புகைப்பட ஆவணங்கள்
  3. தனிமனித ஆளுமைகள், நிறுவனங்கள்
  4. சமூகத்தை ஆவணப்படுத்தல்
  5. மொழி இலக்கியப் பதிவுகள்
  6. அறிவுப்பகிர்வும் கல்வியும்
  7. ஆவணப்படுத்தலில் தொழினுட்பப் பயன்பாடுகள்
  8. எண்ணிம நூலகங்கள் [Digital Libraries], இணையத் தளங்கள், தரவுத் தளங்கள்
  9. நூல் விபரப்பட்டியலும் நூலகவியலும்
  10. கலை பண்பாடு நினைவுகளும் ஆவணப்படுத்தலும்

மேற்கோள்கள்

  1. ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya