தமிழ் தியாகராஜன்
தமிழ் தியாகராஜன் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநரும், திரைப்படத் தயாரிப்பாளரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். குறிப்பாக இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். வாழ்க்கை மற்றும் தொழில்தமிழ் தியாகராஜன் 06 ஜூன் 1989 அன்று தமிழ்நாட்டில் ( இந்தியா ) ஜெயம்கொண்டத்தில் பிறந்தார். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், பிறகு சென்னையில் குடிசார் பொறியியல் படிக்கச் சென்றார். தனது கல்லூரி படிப்பிற்கு பிறகு சில ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் உள்ள மென்பொருள் துறையில் பணியாற்றினார். சுயதீன திரைப்படத்தை இயக்கவும் தயாரிக்கவும், தான் வேலை செய்துக்கொண்டு இருந்த மென் பொருள் வேலையை துறந்து தன்னை 2013க்கு பிறகு முழுமையாக திரைத்துறைக்கு மாற்றிக்கொண்டார். அதன் பிறகு சோதனை முயற்சியாக சில குறும்படங்கள் இயக்கினார். மேலும் இவர் தமிழ் மொழி குறும்படமான டோனா 2014 உருவாக்கினார் (மே 2015 இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் குறும்படப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] ).[2][3][4] வாழ்க்கைதமிழ் தியாகராஜன் புனிதவதி என்பவரை மணந்தார்.[5]. இவர் தேசிய அளவில் பல பதங்கங்களை கராத்தே மூலமாக பெற்றார். இவர் கராத்தேவின் மூன்றாவது டான். இவர் தற்பொழுது சென்னையில் காவலராக பணி புரிகிறார். திரை வாழ்க்கை
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia