தம்புயுக்கோன் மலை
தம்புயுக்கோன் மலை (மலாய் மொழி: Gunung Tambuyukon; ஆங்கிலம்: Mount Tambuyukon) என்பது மலேசியாவில் மூன்றாவது உயர்ந்த மலையாகும். இந்த மலை சபா மாநிலத்தில், மேற்கு கரை பிரிவு மாவட்டத்தில் அமைந்து உள்ளது. இந்த மலையின் உயரம் 2,579 மீட்டர், (8,461 அடி). [1][2] மலேசியாவில் மிக உயர்ந்த மலையான கினபாலு மலைக்கு வடக்கில் உள்ளது.[3] 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் 300 மீட்டர்கள் (984 அடி) உயரத்தில் பாலூட்டிகள் இருப்பதாக அறியப்பட்டது. அதைப்பற்றி ஆய்வுகள் செய்தார்கள். மலை உச்சியில் அரிதிலும் அரிதான ஓர் எலி இனம் வாழ்வது அறியப்பட்டது.[4] தவிர மொத்தம் 44 வகையான பாலூட்டி இனங்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.[5] மலைப் பாதைகள்மலை உச்சியை அடைவதற்கு இரண்டு ஏறும் பாதைகள் உள்ளன. ஒரு பாதை மோங்கிஸ் கிராமத்தில் இருந்து தொடங்குகிறது. மற்றொரு பாதை சபா வனத்துறை துணை மின்நிலையத்தில் இருந்து தொடங்குகிறது. தம்புயுக்கோன் மலையில் ஏறுவதற்கு முன்னர் வனத்துறை அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும். இந்த மலை சபா மாநிலத்தின் சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காட்சியகம்
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia