தரிக்-இ ஜகான்குசாய்தரிக்-இ ஜகான்குசாய் என்பது பாரசீக வரலாற்றாளர் அடா மாலிக் சுவய்னி எழுதிய ஒரு வரலாற்றுப் புத்தகம் ஆகும். இந்நூலின் தமிழ் பொருள் "உலகத்தை வென்றவரின் வரலாறு" என்பது ஆகும். இது மங்கோலியர், குலாகு கான், ஈல்கானரசு பாரசீகத்தை வென்றது மற்றும் இசுமாயிலிகளின் வரலாறு ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது. பாரசீக இலக்கியத்தில் ஒரு விலைமதிப்பற்ற நூலாகவும் இது கருதப்படுகிறது.[1] சுவய்னியின் தாயகமான ஈரானின் மீதான மங்கோலியப் படையெடுப்பை, அப்படையெடுப்பிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் கண்டவற்றை அடைப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டது. பட்டுப் பாதையில் இருந்த ஒற்றார், புகாரா மற்றும் சமர்கந்து ஆகிய செல்வச் செழிப்புமிக்க நகரங்களின் மீது 1219ஆம் ஆண்டு செங்கிஸ் கானின் இராணுவங்கள் புயல் வேகத்தில் நடத்திய தாக்குதல்கள் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது. இந்நூலை யோவான் ஆன்ட்ரூ பாய்ல் என்கிற ஆங்கிலேயர் 1958ஆம் ஆண்டு "உலகத்தை வென்றவரின் வரலாறு" என்ற தலைப்பில் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.[2] உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia