தர்கிசோர் பிரசாத்
தர்கிசோர் பிரசாத் (Tarkishore Prasad; பிறப்பு பெப்ரவரி 5,1956) என்பவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நவம்பர் 16 முதல் ஆகத்து 9,2022 வரை பீகாரின் 5ஆவது துணை முதல்வராக பணியாற்றினார். நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதித் துறை ஆகியவற்றுடன் நிதி, வணிக வரி இலாகாக்க அமைச்சராகவும் பதவி வகித்தார்.[2][3] பீகார் சட்டப்பேரவையில் பாஜகவின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[4] இவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் கதிகார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] இளமைதர்கிசோர் பிரசாத் பகத், கல்வார் சாதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கங்கா பிரசாத் பகத்துக்கு மகனாகப் பிறந்தார். 1956ஆம் ஆண்டில் தர்பங்காவின் இலலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கதிகாரில் உள்ள தர்சன் சா கல்லூரியில் அறிவியல் பிரிவில் இடைநிலைப் படிப்பை முடித்தார்.[6] அரசியல்இராச்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் உறுப்பினரான பிரசாத், அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்தில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2005ஆம் ஆண்டில் கதிகார் தொகுதியில் போட்டியிட்டு தனது முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இத்தேர்தலில் இவர், இராம் பிரகாசு மகாதோவை வெறும் 165 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[7] பின்னர் 2010, 2015, 2020 தேர்தல்களிலும் இவர் வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia