பீகார் சட்டப் பேரவை
பீகார் சட்டப் பேரவை இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஈரவை பீகார் சட்டமன்றத்தின் கீழவை ஆகும். முதல் மாநில தேர்தல் 1952 இல் நடைபெற்றது.[4] பீகார் பிரிவினைக்கு முன், ஒரு நியமன உறுப்பினர் உட்பட சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் பலம் 331 ஆக இருந்தது. பிரிவினைக்குப் பிறகு, உறுப்பினர்கள் 243 ஆகக் குறைக்கப்பட்டன. சிறி கிருட்டிணா சின்கா அவையின் முதல் தலைவராகவும் , முதல் முதலமைச்சராகவும் ஆனார், அனுக்ரா நாராயண் சின்கா அவையின் முதல் துணைத் தலைவராகவும் முதல் துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] வரலாறுஇந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்ட பிறகு, பீகார் மற்றும் ஒரிசா தனி மாநிலங்களாக மாறியது. சட்டத்தின்படி ஈரவை கள் கொண்ட சட்டமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டது. 22 சூலை 1936 இல், முதல் பீகார் சட்ட மேலவை அமைக்கப்பட்டது. அதில் 30 உறுப்பினர்கள் இருந்தனர் மற்றும் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் தலைவராக இருந்தார். பீகார் சட்டமன்றத்தின் இரு அவைகளின் முதல் கூட்டு அமர்வு 22 சூலை 1937 இல் நடந்தது. பீகார் சட்டப் பேரவையின் பேரவைத் தலைவர் இராம் தயாலு சிங் தேர்வு செய்யப்பட்டார்.[6] பீகார் சட்டப் பேரவை பதவிக் காலங்கள்பீகார் சட்டப் பேரவை தொடங்கப்பட்ட மற்றும் கலைக்கப்பட்ட தேதிகள் பின்வருமாறு. ஒவ்வொரு சட்டப் பேரவைக்கும் முதல் அமர்வு தேதி மற்றும் பதவிக்காலம் முடிக்கும் தேதி ஆகியவை தொடக்க மற்றும் கலைப்பு தேதிகளில் இருந்து தேதிகளிலிருந்து (முறையே) வேறுபட்டிருக்கலாம்.
வேலைபீகார் சட்டப் பேரவை நிரந்தரமான அமைப்பல்ல, கலைப்புக்கு உட்பட்டது. சட்டப் பேரவையின் பதவிக்காலம், விரைவில் கலைக்கப்படாவிட்டால், அதன் முதல் அமர்வுக்கு நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆகும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மூன்று அமர்வுகள் (நிதியறிக்கை அமர்வு, மழைக்கால அமர்வு, குளிர்கால அமர்வு) உள்ளன. சட்டப் பேரவையின் அமர்வுகள் பேரவைத் தலைவர் தலைமையில் நடைபெறும் மற்றும் ஒரு மசோதா சாதாரண மசோதா அல்லது பண மசோதா என்பதை பேரவைத் தலைவர் சான்றளிக்கிறார். பொதுவாக அவர் வாக்களிப்பில் பங்கேற்க மாட்டார், ஆனால் அவர் வெற்றி-தோல்வியற்ற நிலையில் வாக்களிப்பார். பீகார் சட்டப் பேரவையின் தற்போதைய பேரவைத் தலைவராக நந்த் கிஷோர் யாதவ் உள்ளார்.[8] சட்டப் பேரவையில் செயலாளரின் தலைமையில் ஒரு செயலகம் உள்ளது. அவர் பேரவைத் தலைவரின் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளார். செயலாளரின் பணி பேரவைத் தலைவருக்கு உதவுவதாகும். படேஷ்வர் நாத் பாண்டே பீகார் சட்டப் பேரவையின் தற்போதைய செயலாளராக உள்ளார். இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia