தர்க்க பரிபாடை

தர்க்க பரிபாடை [1] என்னும் பெயரில் தமிழில் ஒரு நூல் இருந்தது. இது ஒரு அளவை நூல். வினாவிடைப் பாங்கில் இந்த நூல் இருந்தது என்பதை நூலின் பெயரால் உணரமுடிகிறது. நூலின் காலம் 16 ஆம் நூற்றாண்டு.

... மேற்கோள் ஏது உபநயம்
திகமனம் எனமுறை நிகழப் பெறுமே

என்றிருந்த இந்த நூலின் பகுதியைச் சிவஞான சித்தியார் உரையில் மறைஞான சம்பந்தர் எடுத்துக்காட்டுகிறார். மேலும் இந்த நூலின் ஆசிரியர் காலிங்கராயர் எனவும் அந்த உரை குறிப்பிடுகிறது. [2]

கருவிநூல்

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. தர்க்க பரிபாஷை என்பது ஒரு வடமொழி நூல்
  2. 13 ஆம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு உரை எழுதிய காலிங்கர் வேறு..
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya