தவல்சிங் சாலா
தவல்சிங் நரேந்திரசிங் சாலா என்பவர் குசராத்து மாநிலத்தினை சேர்ந்த சுயேச்சை அரசியல்வாதி ஆவார். இவர் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குசராத்து சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின்[1] வேட்பாளராக பயாத் சட்டமன்றத் தொகுதியிலிருந்து குசராத்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இவர் மீண்டும் 2022-ல் நடைபெற்ற குசராத்து சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2] இவர் குசராத்தின் கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்.[3] சாலா மற்றும் அல்பேஷ் தாக்கூர் இந்தியத் தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறி, குசராத்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு இந்திய மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தனர்.[4][5][6] இவர் குசராத்து சத்ரிய தாக்கூர் சேனாவின் துணைத் தலைவர் ஆவார். இவர் தாக்கூர் சேனா செய்தித் தொடர்பாளராகவும் இருந்துள்ளார்.[7] சாலா மீண்டும் 21 அக்டோபர் 2019 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பயத் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரசு வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia