தவளைப்பாய்ச்சல்உற்பத்தியில் நுகர்விலும் தொழில்நுட்பம் ஒரு முக்கிய கூறு ஆகும். திருத்தங்கள், கண்டுபிடுப்புகள், ஆய்வுகள் ஊடாக தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி பெற்றுவரும் ஒரு கூறு ஆகும். இதைக் கருத்தில் கொண்டு ஒரு வளர்ச்சியடைந்துவரும் நாடு தகுந்த சில உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, அது செலவு குறைவானதாகவும் பயன் மிக்கதாகவும் அமையலாம். அதனால் அந்த நாட்டின் வளர்ச்சி வேகம் உயரும் என்பதுதே தவளைப்பாச்சல் வளர்ச்சியல் கோட்பாடு. எடுத்துக்காட்டாக கம்பித் தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்துக்கான செலவு அதிகம். அதனால் மிகச் சிறிய தொகை இந்தியர்கள் மட்டுமே தொலைபேசி வசதியைப் பெற்று இருந்தனர். கம்பியற்ற செல்பேசி இணைப்புகாளைப் பெறுவது ஒப்பீட்டளவில் இலகுவானது செலவு குறைவானது. இதனால் பல மடங்கு இந்தியர்கள் இந்த வசதியைப் பெறுவது ஏதுவானது. அதே வேளை கம்பிக் கட்டமைப்புக்களை கொண்ட மேற்கு நாடுகள் அவற்றின் செலவுகளையும் ஏற்றுக்கொண்டு கம்பியற்ற செல்பேசிச் சேவைகளுக்கு மாறுவது ஒரு கூடிய சவாலாக பார்க்கப்படுகிறது. இது தவளைப்பாச்சலுக்கு ஒர் எடுத்துக்காட்டு. நிறைந்த செலவில் தமது சொந்த மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபடாமல் கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி அவற்றை தமது மென்பொருள் தேவைகளுக்கு பயன்படுத்துவதையும் தவளைப்பாச்சல் முறைக்கு ஓர் எடுத்துக்காட்டாக சொல்லலாம். மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia