தாசமார்க்கம்

தாசமார்க்கம் என்பது சைவ சமய முழுமுதற்கடவுளான சிவபெருமானை அடைவதற்கான சதுர்மார்க்கம் எனும் நான்கு வழிகளுள் ஒன்றாகும். [1] [2] இதனை தொண்டு நெறி என்றும் அழைப்பர். [3]

திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் பல்வேறு தொண்டு நெறிகளை குறிப்பிட்டுள்ளார். அவையாவன..

  • ஆலயத்தில் திருவிளக்கு ஏற்றுதல்
  • மலர்களைக் கொய்து இறைவனுக்கு அர்ப்பணித்தல்
  • பசுஞ்சாணத்தால் திருக்கோயிலை மெழுகுதல்
  • ஆலயத்திலுள்ள குப்பைக் கூளங்களைக் கூட்டி சுத்தம் செய்தல்
  • இறைவனின் முன் நின்று அவனது நாமத்தைச் செப்புதல்
  • கோயில் மணிகளை அசைத்து ஓலி எழுப்புதல்
  • இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்விக்கத் தேவையான பொருட்களைக் கொண்டுவருதல்

ஆதாரங்கள்

  1. http://www.tamilvu.org/slet/l5J00/l5J00d16.jsp?pgpass=805&number=260
  2. சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம் தாசமார்க் கம்என்றும் சங்கரனை அடையும் நன்மார்க்கம் நாலவைதாம் - சிவஞான சித்தியார் திருப்பாடல்
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-22. Retrieved 2016-08-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya