தாண்டவம் (திரைப்படம்)
தாண்டவம் என்பது 2012 ஆம் ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது ஒரு அதிரடி சாகசப் படம். யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ் இதனை தயாரித்தது.[1]. கதைச் சுருக்கம்இந்தியாவின் உளவுப்பிரிவிவான ராவில் பணியாற்றும் விக்ரமும், ஜெகபதிபாபுவும் நண்பர்கள். திடீரென ஊரில் விக்ரமுக்கு திருமணம் நிச்சயமாகிறது. வேண்டா வெறுப்பாக வருபவர், அனுஷ்காவைப் பார்த்ததும் மனம் மாறி மணக்கிறார். திருமணமான கையோடு வேலை தொடர்பாக மனைவியுடன் லண்டன் கிளம்புகிறார். அங்கே எதிராளிகளின் சதியின் காரணமாக மனைவியையும் பார்வையையும் இழக்கிறார். அதன்பிறகு எதிரிகளை எவ்வாறு பழிவாங்குகிறார் என்பதை சண்டை சாகசங்களுடன் சொல்லியிருக்கிறார், இயக்குநர் விஜய்.[2] நடிகர்கள்
இசைஇப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பாடல்களை நா. முத்துகுமார் எழுதியிருந்தார். தயாரிப்புஇப்படத்தை விஜய் இயக்கினார். திரைத் தொகுப்பாளராக ஆண்டனி, ஒளிப்பதிவாளராக நீரவ்சா, கலை நாகு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படத்தின் தொழில் நுட்பத்திற்காக வெளிநாட்டில் இருந்து கலைஞர்களை இறக்குமதி செய்தார் விஜய்.[3]. மேலும் மனோகர் வர்மா என்பவர் சண்டை காட்சிகளை வடிவமைத்திருந்தார். விமர்சனம்ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "உளவுத் துறை, துரோகம் எனப் பல முறை சுவைத்த தோசையை, 'எக்கோலொகேஷன்’ என்ற புது சட்னியோடு பரிமாறி இருக்கிறார் இயக்குநர் விஜய். ஆக்ஷன், சென்டிமென்ட், காதல், சதி, உளவு, வியூகம் என்று ஷிஃப்ட் போட்டுத் தாண்டவமாடி இருக்க வேண்டிய கதை, திருப்பம் இல்லா திரைக்கதையால் தடுமாறுகிறது... படத்தின் பெயரில் இருக்கும் வைப்ரேஷன் படத்தில் இல்லியே பிரதர்!" என்று எழுதி 40100 மதிப்பெண்களை வழங்கினர்.[4] மேற்கோள்களும் குறிப்புகளும்
|
Portal di Ensiklopedia Dunia