தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்)
தெய்வத்திருமகள் (Deiva Thirumagal) 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இது இயக்குநர் விஜயால் எழுதி இயக்கப்பட்டது. இப்படத்தில் விக்ரம் மனவளர்ச்சி குன்றியவராக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அனுஷ்கா, அமலா பால், நாசர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்துள்ளனர். திரைக்கதைமனவளர்ச்சி குன்றிய விக்ரமின் மனைவி குழந்தை பிறப்பிற்குப் பின் இறந்து போக, குழந்தையை விக்ரமே வளர்க்கிறார். இதனை அறிந்த அவரது மனைவியின் குடும்பத்தார் அவரிடமிருந்து குழந்தையைப் பிரிக்கின்றனர். பின்னர், நீதிமன்றம் மூலம் வாதாடி விக்ரம் குழந்தையைப் பெற்றாரா இல்லையா என்பதைச் சொல்வதன் மூலம் படம் முடிகிறது. இடையே அனுஷ்கா அவரது தந்தை ஒய். ஜி. மகேந்திரனுடனான சிக்கல்களும் காட்டப்பட்டுள்ளன. குழு
திரையரங்கில்சென்னையில் முதல் மூன்று நாளில் இத்திரைப்படம் அரங்கம் நிரம்பிய காட்சிகளுடன் ₹ 80 லட்சம் வசூலித்தது.[1] முதல் வார இறுதியில் 90% அரங்கு நிறைந்த காட்சிகளுடன் 2.53 கோடி ரூபாய்கள் வசூலித்தது.[2] ஆறு வார இறுதியில் 85% அரங்கு நிறைந்த காட்சிகளுடன் 7.01 கோடி ரூபாய்கள் வசூலித்திருந்தது.[3] விருதுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia