தானியேல் கலுயா
தானியேல் கலுயா ஆங்கிலம்: Daniel Kaluuya) (பிறப்பு: 24 பெப்ரவரி 1989)[1] என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் தனது இளம் பருவத்திலிருந்து பல மேடை நாடகங்கள் மூலம் நடிப்புத் துறையில் அறிமுகமானார்.[2] பின்னர் பிரித்தானிய நாட்டுத் தொலைக்காட்சி தொடரான 'இஸ்கீன்ஸ்' என்ற தொடரின் முதல் இரண்டு பருவங்களில் போஷ் கென்னத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இந்த தொடரின் சில அத்தியாயங்ககளையும் இணைத்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[3] இவர் இலண்டனில் உள்ள ராயல் கோர்ட் அரங்கில் 'சக்கர் பஞ்சில்' என்ற மேடை நாடகத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பலரால் பாராட்டப்பட்டார். மேலும் ஈவினிங் ஸ்டாண்டர்ட் விருது மற்றும் சிறந்த புதுமுகத்திற்கான விமர்சகர்களின் வட்டம் தியேட்டர் விருது போன்ற இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.[4] இவர் 2018 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் பான்தர் என்ற திரைப்படத்தில் 'ரியான் கூகிளேர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia